Readers Write In #590: “என் இனிய நிழலே”
- Trinity Auditorium

- Jun 25, 2023
- 1 min read
By Soorya N
நானும் நடந்தேன், என் நிழலும் நடந்தது நானும் சிரித்தேன், என் நிழலும் என்னுடன் சிரித்தது நான் ஏங்கினேன் என் ஏக்கத்தை என் நிழல் உடைத்தது நான் தவித்தேன் என் தாகத்தை என் நிழல் தீர்த்தது
என் முகவரி அறியாமல் , என்னை தேர்ந்து எடுத்தாய் என் அடையாளம் தெரியாமல் என்னிடம் வந்தாய் என் நிழலாய் நின்று ,என் தனிமையை ஒழித்தாய் என் நிழலாய் நின்று என்னைக் தோள் கொடுத்தாய்
என் நிழலாய் என் கால்களோடு நடந்தாய் என் நிழலாய் நின்று என்னுடன் உரையாடினாய்
பேசும் பொம்மையாய் நான் சொல்வதையே சொல்வாய் தாவும் பறவையாய் என்னை காண ஓடிவருவாய் குடைக்குள்ளே சென்றால் துளைத்து போவாய் மழைநீரில் உன் முகத்தை காட்டுவாய்
உன் உரையாடலுக்காக என்னை காக்க செய்வாய் வாடை காற்றில் உன் உருவத்தை உணர செய்வாய் கொளுத்தும் வெயிலில் உன் கண்ணீரை எங்கள் மீது பதிர்ப்பாய் குளிரும் நேரத்தில் உன் சந்தோஷத்தை சிலிர்க்க வைப்பாய்
காற்றுக்கு தெரியும் உந்தன் உருவத்தை மனதிற்கு தெரியும் உந்தன் உலகத்தை கண்ணீருக்கு தெரியும் உந்தன் வலியை வார்த்தைக்கு தெரியும் உந்தன் அன்பை விரல்களுக்கு தெரியும் உந்தன் பூவை குரல்களுக்கு தெரியும் உந்தன் ஓசையை
என் இனிய நிழலே
உன்னை நான் என்றாவது ஒரு நாள் பிடிப்பேன் என்ற நமிக்கையோடு வருகிறேன் உன் பின்னால்
“என் இனிய நிழலே”





Comments