Readers Write In #602: பட்டாம்பூச்சி
- Trinity Auditorium

- Jul 11, 2023
- 1 min read
By soorya
மனம் போன போக்கில் போகும் பட்டாம்பூச்சி ஒரு இடத்தில் ஒரு நொடி கூட நிர்க்கமால் உலாவும் பட்டாம்பூச்சி! உன்னை பிடித்தால் அழகாய் இருப்பாய் நிறத்தில்! கையில் நீ சிக்குவது எளிதல்ல
எங்கள் மனதை விட உன் உடல் வேகமானது! ஒரு நொடியில் ஆயிரம் விளக்கை பார்ப்பாய்! ஆயிரம் எண்ணத்தை ஓரிடத்தில் வைப்பாய்! இலையின் நுனியிலும் விரலின் ஓட்டிலும் வந்து கண் சிமிட்டி நிற்பாய்!
உன்னை தோட நினைத்தால் பறந்து செல்வாய் ! உன்னை தேடி சென்றால் , நாங்கள் இருந்த இடத்தை மறந்து விடுவோம்! நாங்கள் எங்கள் அறையின் உள் இருந்தாலும் , நீ எங்கள் தோல் மீது வந்து கண்ணடிப்பாய்!
உந்தன் குரலை கேட்காமல் நாங்கள் உன்னுடன் விளையாடுவோம் உந்தன் இடையை பார்த்தால் , விறல் கூட மெலிதாகிவிடும்! துள்ளி துள்ளி குதிக்கும் உன்னை எங்கள்!
கைகளுக்குள் அடைத்து வெளியேற்றினால் “மௌனமாக நன்றி சொல்லி ” பறந்து செல்வாய்!






Comments