Readers Write In #611: ஓடினேன்
- Trinity Auditorium

- Jul 30, 2023
- 14 min read
By Soorya N
பாருடி குழந்தை ! அம்பாள் முகம் எப்படி அலங்காரம் பண்ணி இருக்கா பாரு. உம்மாச்சி பாரு, உம்மாச்சி பாரு என்று பாட்டி குழந்தயிடம் சொன்னால் . கோவில் பிரகாரம் சிறியதாய் இருந்தது. 4-5 பெரு இருந்தார்கள்.குழந்தை அழ ஆரம்பித்தது , “பாட்டி ” இதோ ஆயிடுத்து போலாம் போலாம் என்று தாலாட்டினால். உள்ளே இருந்து பூசாரி வந்து குழந்தைக்கு விபூதி வெய்த்து ,அர்ச்சனை செய்த மாலையை பாட்டியிடம் குடுத்தார். பாட்டி மாலையை வாங்கி கொண்டு போலாமா ஆத்துக்கு என்று பொறுமையாக புறப்பட்டாள். கோவிலில் இருந்து வந்து கொண்டிருந்த பொது , ஒருத்தன் வேகமாய் ஓடி வந்து கொண்டிருதான் , அவனை துரத்தி கொண்டு இரண்டு பெரு வந்தார்கள். அவன் கோவிலை பார்த்து , உள்ளே சென்றான். இவர்கள் இருவரும் பாட்டியிடம் ‘ அம்மா , இங்க ஒருத்தன் ஓடி வந்தானா ?நீங்க பாத்தீங்களா என்று கேட்டார்கள். பாட்டி சுலபமாய் எந்த யோசனையும் இல்லாமல் “அந்த கோவிலுக்கு ஒருத்தன் போனதை பார்த்தேன் ,வேணுனா போய் பாருங்கோ னு சொல்லி , நடக்க துடங்கினாள். “குழந்தயிடம் பாட்டி ” கதை சொல்லவா நோக்கு என்று கேட்டால் . ஒரு ஊர்ல …. சிறு நிமிடங்களில் வீட்டிற்கு வந்தார்கள். கோமதி உள்ளே இருந்து வந்தால் குழந்தையின் சத்தம் கேட்டதும் . வாங்கோ மா. அர்ச்சனை பண்ணியாச்சா ?
பண்ணியாச்சு மா ! ஒரே அழகை இவன் கோவில்லா , வெளில வந்தப்புறம் அழுகையே காணும் . படவா என்று செல்லமாய் பாட்டி கூப்பிட்டால். கோமதி சற்று புன்னகைத்தாள். கோமதி : அம்மா ! நா கொஞ்ச நேரம் தூங்கறேன் , அவனை கொஞ்ச பாத்துக்கோங்க. பாட்டி : சரி மா , போ போய் rest எடுத்துக்கோ . உள்ளே பிரகாஷ் கம்ப்யூட்டரை தட்டி கொண்டிருந்தான். பாட்டி உள்ளே வந்து ” ஏன்டா எப்போ பார்த்தாலும் அத இப்படி தற்றியே ,அது உடையதா ? ஒடைஞ்சா வேற வாங்கிக்கலாம்மா . தோ பாருடா ! போச்சுன்னா வேற தருவாளா ,? இது முன்னாடியே தெரியாம போச்சே. ஏன் ? உன் பய்யன் விளையாட்றத்துக் பொருள் கேட்டுண்டே இருந்தான், அதான் சொன்னேன். பிரகாஷ் பெரும் மூச்சு விட்டு. பதில் சொல்லாமல் திரும்பவும் கம்ப்யூட்டரை தட்ட ஆரமித்தான். மூச்சு வாங்க வாங்க எதுக்கியா ஓடி வர! இந்தா தண்ணிய குடி. மடமட னு குடித்து “நன்றி சொல்லி ” அம்பாள் சாமி முன் உட்கார்ந்தான். மூச்சு விட துடங்கினான். சாமியை பார்த்து பேசத்துடங்கினான் ‘என் பெரு ரத்தினம். இங்க தான் என்று பின்னே கை அசைத்து ‘ ஆறாவது தெரு தான் இருக்கேன் “. உன்னைக் என்ன நல்ல தெரியும், உன்னாண்ட நா அழுந்திரிக்கேன் ,சிரிச்சிருக்கேன் ,இவ்ளோ ஏன் ‘உன் கூட வெரம் பேசிற்கேன். இப்போ பாரு உன் முன்னாடி வந்து உக்காந்திருக்கேன் . ஏன்னு கேளேன்.சுத்தி பார்த்தான். கோவிலின் விளக்கும் சிறு காக்க குருவி சத்தம் மட்டும் தான் கேட்டது . பொறுமையாக தலையை திருப்பி சாமியை பார்த்து , நா திருடன் ஆய்ட்டேன் , அப்டீன்னு என் ஏரியா சொல்லுது.
எல்லாரும் தான் நின்னாங்க அன்னிக்கி , ஆத்தோரமா. அந்த மீனு என் கைலதான் மாட்டணுமா? சரி மாட்டினது, ஒழுங்கா இல்லாம கை விட்டு போச்சு .வலைல சிக்கி. அத படகுல போட்டு எடுத்துட்டு வர வழில தான் எங்க ஏரியா பசங்களுக்கும் தென் ஏரியா பசங்களுக்கும் சண்டை.. அன்னிக்கி நடந்த சண்டைல உயிர் பொழைச்சிதே பெருசு , இதுல மீன எங்குட்டு புடிக்கிறிது. போச்சு. மீனும் போச்சு , என்னோட பெரும் போச்சு.நா தான் சண்டைல கடைசியா ஊருக்கு வந்தேன் . ஊரு. நா தான் மீனா கொண்டு பொய் வித்துட்டேன்னு சொல்லி , டேஷன் ல ஒக்காத்தி வெச்சிருச்சு. ரெண்டு நாள் ஆச்சு அங்க இருந்து தப்பிச்சு , இன்னு ஓடிட்டே இருக்கேன் . அன்னிக்கி நா ஏன் கடைசியா வந்தேன்னு சொல்லறத்துக்குள்ள எங்க ஊரு ஜனங்க முடிவு எடுத்துட்டாங்க நா தான் திருடன்னு . சற்று அழுகை வந்தது. இருக்கட்டும் நா திருடனாவே இருக்கேன், ஆனா.. காட்சி மாற்றம் shall I go out of this house ! சொல்லு. நீ என்ன சொல்றியோ அப்டியே பண்ணலாம். இங்க இருந்தா இப்டியே ஆத்துக்குள்ளயே வேசிப்பா. வாழனும் , நம்ப வாழனும் , நிம்மதியா சந்தோஷமா எந்த பொறாமையும் இல்லமா வாழனும். அடிமையா இருக்கலாம் தப்பில்லை, ஆனா அந்த அடிமையிலும் ஒரு காதல் இருக்கனும், நம்மகாக இவானு இருக்கனும். அடிமையா இருக்கோம்னு ஒரு பெருமை இருக்கனும் .அப்போ அது சரினு அர்த்தம் .சொல்லு என்ன பன்னலாம்னு? குழந்தை “ஆ” னு அழ துடங்கியது .குழந்தையை அனைத்து தூங்க வைத்தால். அவளுக்கு வந்த குரல் செயதியை நிறுத்தினால். கோமதி கொஞ்ச இங்க வாயேன் . ஒரு பத்து நிமிஷம்மா வரேன், குழந்தையை தூங்க வெச்சிடறேன். சரி! நானே வரேன் என்று உள்ளே வந்தால் பாட்டி . நாந்தான் வரேன்னு சொன்னேனே மா . பரவால்ல இருக்கட்டும், குட்டி குட்டியா வேல ஏதாவது பாக்கணும் , இல்லனா உடம்பெல்லாம் வலிகர்து . கோமதி சிரித்தாள். சரி , நா எதுக்கு கூப்ட்டேன்னா, நா கோவில் போய்ட்டு வரச்ச, ஒரு ரெண்டு பெரு ஒருத்தன துரத்தின்ட் வந்தாமா, என்ன தாண்டி தான் போனான் .அவன் கோவிலுக்கு உள்ளே பொய் ,ஒளிஞ்சிண்டான் , என்கிட்டே கேட்டாங்க அந்த ரெண்டு பெரும். நா ஏதோ யோசனைல அவன காட்டி கொடுத்துட்டேன் மா . குழந்தையை வெச்சிண்டு இருந்தென்ற பயமா, இல்ல என்ன ஆச்சுன்னு தெர்ல, பாவம் பாக்க ரொம்ப பாவமா இருந்தான் . காட்டி குடுத்திற்க வேண்டாமோனு தோணித்து. அவா ரெண்டு பெரும் போலீசா இல்ல ரௌடியானு தெர்ல ,மனசு கேக்கவே இல்ல .உன்கிட்ட சொல்லணும் நினச்சேன், பாவம் அந்த புள்ள.
அட பாவமே ! விடுங்கோ , நீங்க தெரியாம தான் பண்ணினேள் , தெரிஞ்சு செய்யல . குழந்தையை வேற வெச்சிண்டு இருந்தேலோனோ, அந்த பயம் தான் . வறுத்த படாதீங்கோ மா . அவா ரெண்டு பெரும் யாருனு தெர்ல, போலீசா இருந்த அடிப்பா , திருடனா இருந்தாலும் அடிப்பா , என்ன படுத்தறாளோ அந்த பையனா.குழந்தை திரும்பவும் அழ துடங்கியது , பாட்டி “ஜோ ஜோ னு பாடினால் “. சரி , நீ தூங்கவை , நா போறேன் ஹால் க்கு. திரும்பவும் குரல் செயதியை கேட்க துடங்கினாள். என்னைக் இங்க என்ன சந்தோஷம் இருக்குனு இப்போ வரைக்கும் தெர்ல கோமதி .என்னைக் ஏக பிரச்சனை மட்டும் தான் இருக்கு உன்கிட்ட சொல்ல. என்னமோடி அத விடு பாபா எப்படி இருக்கு. நீ எப்டி இருக்கா சொல்லு? கோமதி குரல் செயதியை சொல்ல துடங்கினாள். கோவில் வெளியே சிறு சலசலப்பு கேட்டது. கேட்டவுடன் பொறுமையாய் கண்ணை மூடி த்யானம் செய்ய துடங்கினான். ஒரு குடும்பம் பிரகாரத்துக்குள் வந்தது. இவன் த்யானம் செய்வதை கண்டதும், அந்த குடும்பம் ‘ஷூ ,ஷூ என்று சொல்லி “அவர் த்யானம் பண்றார் ,நம்ம கத்திண்டு இருக்க கூடாது. எல்லாம் சாமியை பாரு.
இவன் கண்ணை திறந்தான் , அங்கே பூசாரியை தேடினான். எழுந்து பிரகாரத்தை சுற்றினான் . திரும்பவும் சாமி முன் வந்து நமஸ்காரம் செய்தான். வெளிய போலாமா வேணாமா என்று யோசனையுடன் நின்று கொண்டிருந்தான் . உள்ளே அந்த குடும்பம் நின்று இருந்ததை பார்த்து உள்ளே சென்றான். பூட்டி இருந்த சாமி கதவை திறந்தான் ‘ ஏன்பா நீங்க இங்கதான் வேலை பாக்கறீங்களா என்று அந்த தாத்தா கேட்டார். இல்ல சாமி , ஆனா இங்க ஆள் இல்லாத நேரத்துல நா பண்றத்துக் அனுமதி இருக்கு. சட்டென்று விளக்கில் இருந்து சூடத்தை ஏற்றி ,மணியை எடுத்து அடித்து தீபாரதனை காட்டினான் , எல்லோரும் கன்னத்தில் அடித்துக்கொண்டார்கள், வெளிய தீபாரதனை காட்டி , விபூதி குடுத்து வந்த தக்ஷனை பணத்தை சுருட்டி உண்டியலில் போட்டு சாமி அறையை மூடினான்.
வெளிய வருமுன் “அந்த குடும்பம் அவனுக்கு நன்றி சொன்னார்கள் “ரொம்ப நன்றி தம்பி , பூஜை பண்ணி வெச்சதுக்கு . நன்னா பண்ணீங்க . நன்றீங்க , உங்கள்ளுக்கு என்ன பெரு? பின்னாடி இருந்து அவரின் பெண் வந்து காதில் ஏதோ முனுமுனுத்தாள். போலாம் போலாம் என்றார். சரி தம்பி, அப்போ நாங்க புறப்படறோம். அப்புறம் உங்க பெரு? இரண்டு பெரு வரும்போல் இருந்துது . ரத்தினம் அதை கண்டதும் புறப்பட்டான். அவர்கள் கோவில் அருகே வந்ததும் ‘இவன் ஓடினான் ‘. ஓடாத நில்லுடா, என்றார்கள். தாத்தா : யாரு தம்பி நீங்க ரெண்டு பெரும் ,ஏன் அவரை தொரத்தேறீங்க . சார் ,அவன் திருடன் சார்.ஸ்டேஷன் ல இருந்து தப்பிச்சிட்டான் நேத்திக்கி ராத்தரி , தாத்தா “அப்படியா ” என்று அருவெறுப்பாய் பார்த்தார். ச்சா , அவனா அர்ச்சனை பண்ணான் , ஒரு திருடனா . என்று கோவப்பட்டார்.. எல்லாரும் வாங்கடி இங்க , கலம்பலம் வாங்க, பண்ணவன் ஒரு திருடன் , என்று சொல்லி எல்லோரும் இடத்தை விட்டு நகர்ந்தார்கள் , என்ன பாவம் நான் பண்ணேனோ இப்படி ஆயிடிச்சே. நானே கோவிலுக்கு ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் வரேன் இப்படியா நடக்கணும் ,முதவாட்டி கோவில்ல ஏமாந்து போய்ட்டேன் என்று கடும் வெறுப்பாய் தாத்தா இருந்தார். இவன் ஒவ்வரு தெருவை நோக்கி ஓடிக்கொண்டே இருந்தான் , அங்கங்கே பதுங்கினான் . சில இடங்களில் பொறுமையாக நடந்தான் .மக்களோடு மக்களாக . பதுங்க இடம் இல்லாமல் , கிடைத்த இடத்திலெல்லாம் நின்றான் , பின்னாடி திரும்பி திரும்பி பார்த்தான் யாராவது வறார்களா என்று . எங்கே பார்த்தாலும் ,இவனை எல்லோரும் தேடுவது போலும் ,எல்லா மக்களும் காவலர்களாய் தெரிந்தார்கள் இவனை வழி மாறி கொண்டுபோவது போல் உணர்தான் . ‘எங்க போறது தெர்லயே , நண்பன் கண்ணா வீட்டுக்கும் போக முடியாது , ஊருக்குள்ள விடமாட்டாங்க . நம்ம வாட்டுக் போலீஸ் ட்டா இருந்து தப்பிச்சிட்டோமே , ஒரு வேலை ‘நம்பள தேடி வந்து இல்லனு , போஸ்டர் அடிச்சிட்டாங்கன்னா , அப்புறம் தெருவுல சுத்த கூட முடியாது . பேசாம ….
டேய் ரத்னம் , டேய் என்று ஒரு குரல் கேட்டது ,கூட்டத்தில் சரியாக முகம் தெரியவில்லை , வெள்ளம் வெள்ளமாய் மக்கள் சூழுந்து கொண்டார்கள் ரத்தினத்தை . இந்த இடத்தை பாத்தாலே பயமா இருக்கு என்னைக் , முதல இங்க இருந்து போனும் என்று நீந்தி கொண்டே போனான் , டேய் ரத்தினம் , நில்லுடா திரும்பவும் குரல் கேட்டது . யாரு என்று பார்த்தான் , கையில் என்னவோ அசைத்து அசைத்து காமித்தான் , ஆனால் நின்று பேச விருப்பம் இல்லை , நடந்தான். , சிறிது தூரம் வந்தான் . கூட்டம் குறைந்தது ,ஆட்கள் ‘என்னும்’ அளவிற்கு கூட இல்லை , மாலை ஆறு மணி ,வாடை காற்று அடித்தது . காதில் சிறிதாய் கேட்க்கும் இடி சத்தம் ,மேகங்களுக்குள் போட்டி , கண்ணை அழைத்து செல்வதற்கு என்றே வரும் மின்னல்.இன்னிக்கி மழைல தான் தூக்கமா ? நெத்தி கோவில் வாசல்ல , ‘இன்னிக்கி’ என்று அங்கும் இங்கும் பார்த்தான் . ஒரு ஓரமாய் இருந்த திண்ணையில் போய் உட்கார்தான் . எதுக்கு மணி நம்பள கூப்டான்னு தெர்லயே,போன் கூட இல்ல பேச , என்ன பண்றது ,என்னவோ சொன்னானே கையை அசைச்சி. ஒரு வாய் சாப்பிடு , இந்தா இந்தா வா வா வா , அங்க பாரு மழை . அது என்ன ? மழை , பாத்தியா . அங்க பாரு மின்னல் என்று குரல் மாறியது .குழந்தைக்கு புரையேறியது , அச்சச்சோ இந்தா தண்ணி குடி என்று பாட்டி சிப்பறை வாயில் வைத்தால் , குழந்தை அதை குடித்தது . அம்மா கோமதி , ஒரு பாதி இட்லி கொண்டு வா மா , இதோ வரேன் மா .
ஜிப்பறை குழந்தை வெளியே போட்டது விளையாட்டாய் , ரத்தினம் இதை பார்த்துக்கொண்டே இருந்தான் . அட பட்டு , ஏன்டா அங்க தூக்கி போட்ட , குழந்தை சிரித்தது ,. மழை கொட்டுது போட்டும் போ அப்புறம் எடுத்துப்போம் என்று உள்ளே வருகையில் ,கோமதிடம் திரும்பி சொன்னால் ஜிப்பாறை பற்றி . சரி போன போறது ,மழை விடட்டும் . அம்மா என்று குரல் கேட்டது , இது உங்களோடது ,குழந்தை கீழ போட்டுட்டான் , இந்தாங்க .என்று ரத்தினம் குடுத்தான் . Thanks a lot sir ! உள்ள வாங்க ,மழை கொற்றது , நிக்கட்டும், அப்புறம் போங்கோ . sorry போங்க அப்புறமா .இப்போ உள்ள வாங்க ரத்தினம் அந்த வார்த்தையை கேட்டதும் சிரித்தான் . பாட்டி கண்ணாடியை துடைத்து கண்ணை நன்கு திறந்து “ஏன் ப்பா , நீ இன்னிக்கி காலைல அந்த அம்மன் கோவிலுக்கு பொய் ஒளிஞ்சிடியே , அவன் தானே நீ . ஆமா ,அது நாந்தான் . அப்பாடி , ரொம்ப சாரி தம்பி , நா ஏதோ நினைப்புல அப்போ உன்ன காமிச்சு கொடுத்துட்டேன் . என்னைக் மனசே கேக்கல, இதோ இவள்ட்ட சொல்லிண்டே இருந்தேன் காலைல . ஆமா சார் ,காலைல இருந்து ஒரே கவலை அம்மாக்கு உங்கள பத்தி. இப்போதான் நிம்மதியா இருக்கு , எதுக்கு பா அவா உன்ன தேடினா ? என்ன பிரச்னை ?
அவன் மௌனமாய் இருந்தான் . கோமதி சட்டென்று ” அம்மா ,அத விடுங்கோ , now he is here . சார் நீங்க உள்ள வாங்க . மழை விடட்டும் ,போலாம் .என்று உள்ளே அழைத்தால் . ரொம்ப நன்றி அம்மா. பாட்டியிடம் சொன்னான் ரத்தினம் . நீங்க கேட்ட கேள்விக்கு எல்லாம் என்கிட்ட பதில் இருக்கு ,ஆனா …என்று இழுத்தான் . நீ ஒன்னும் பேச வேண்டாம் , நீ பொறுமையா இரு , அம்மா நீ அவனுக்கு காபி போட்டு எடுத்துண்டு வாம்மா .இந்தாங்க சார் துண்டு என்று பிரகாஷ் வந்து குடுத்தான் . எதிரில் நாற்காலியில் உட்கார்தான் . என்னமா இப்போ த்ரிப்த்தியா , நீ காட்டி கொடுத்தவர் இங்க தான் இருக்கார் . அம்மா சிரித்தாள் . இந்தாங்க குடிங்கோ , பொறுமையாய் குடிப்பா . ரத்தினம் எல்லோரையும் பார்த்து சிரித்து ஒரு ஒரு வாயாய் குடித்தான் . நன்றி சொன்னான் ரத்தினம் காப்பி குடித்து விட்டு. காபி டவராவை பிரகாஷ் உள்ளே எடுத்து சென்றான் . இடி பயங்கரமாய் இடித்தது . பெரும் சப்தம் வெளியே கேட்டது . ஏதோ வெடித்த சப்த்தம் , transformer வெடிச்சிருக்கும் ன்று ரத்தினம் சொன்னான் . கரண்ட் கட் ஆனது . நா பொய் ,மெழுகுவர்த்தி எடுத்துண்ட வரேன் . இறுமா , மழை ஆரமிச்சோனேயே நா எடுத்து வெச்சிட்டேன் , சரக்கென்று ஏற்றி வைத்தால் பாட்டி .பேப்பரை விசிறியாய் விசிறி கொண்டால் பாட்டி . ஏன்பா , உன் பெரு என்ன ? ரத்தினம் , எங்க ஏரியா “வடக்கு நகர்” மீன்பூடிக்றதுல நாங்க தான் முக்கியமான கூட்டம் . அட , வடக்கு நகரா , நாங்க வாராவாரம் அங்க வருவோம் , நல்லா இருக்கும் அந்த பீச் . என்னா மீன் வாடைதான் கொஞ்சம் நாறும். ரத்தினம் முகம் சிரித்தது -அதுதான் எங்க மூச்சு என்று சொல்லும் போல் இருந்துது .
ஆனா நன்னா இருக்கும் . ஆமா , சுகமான காத்து ,மெலிசான குரல்கள் தூய்மையான எண்ணங்கள் நிறைந்த மனுஷங்க . ஒரு போட்டீலா எல்லாமே மாறிச்சு.. முகம் மாறியது . உள்ளே இருந்து பிரகாஷ் ” எங்கப்பா இருக்க? இங்க கரண்ட் இல்லா , இப்போ போகாதீங்கன்னு சொன்னா கேக்கறியா ? சரி வை . என்னவாம் ? எங்க இருக்காராம் ? ஏதோ ஒரு குழந்தையை ஆத்துல விட்டு வறாராம் . என்னவோ ,ஊருக்கு உதவரேனு ஓடிண்டே இருக்கார். ரத்தினம் வெளியே சென்றான் , மழை பெரிதாக பெய்து கொண்டிருந்தது. பீடியை எடுத்தான் , அங்கே இருந்த குழந்தையை பார்த்து , அதை தூக்கி போட்டான் . வெளியே பயங்கர இருட்டாய் இருந்துது , ஒரு காவலன் வந்தான் மழையில் , பிரகாஷ் சார் ‘ அப்பா வந்துட்டாரா வீட்டுக் என்று கேட்டான் ? ரத்தினம் பதறினான் , இது இன்ஸ்பெக்டர் வீடா என்று பயந்தான் , போயிடலாம் என்று யோசனை வந்தது .
இருட்டில் அந்த காவலனுக்கு ரத்தினம் செவிற்றோரமாய் நிற்பது தெரியவில்லை . அப்பா இன்னு வரல ஏட்டு சார் , இப்போதான் பேசினார் , ஏதோ குழந்தையை ஆத்துல விட்டுட்டு வரேன்னு சொன்னார் . நீங்க போன் பண்ணி பாருங்க ,எடுப்பார் . கொஞ்ச வந்து விட்டுட்டு போயிடுங்க . சரி சார் , சரி , நா பொய் பாக்கறேன் என்று புறப்பட்டான் . ரத்தினம் மனசில் நினைத்தான் “கண்ணு தெரியல போலருக்கு காவலனுக்கு இருட்டுள்ள , என்ன பாக்கமா போய்ட்டான் , நல்ல வேலை ” என்று சொல்லி முடிக்கும் முன்னவே அவன் வீட்டு பின் புறத்தை நோக்கி கையை இருட்டில் தடவி தடவி வெளியே வந்துவிட்டான்.
பலராமனிடம் இருந்து பிரகாஷுக்கு போன் வந்தது ‘ பிரகாஷ் , நா இன்னிக்கி ராத்திரி வீட்டுக் வர முடியாதுப்பா ‘ ஏன் பா ? என்ன ஆச்சு ? அது ஒரு கேஸ் , ஆக்ச்சுஸ்ட் தப்பிச்சிட்டான் , வடக்கு நகர்ல ” மீன் புடிக்கிற கும்பல் , ரத்தினம்னு ஒருத்தன், நாளைக்குல கண்டுபுடிக்கணுமாம் ” பிரகாஷ் அதிர்ந்து நின்றான் , பக்கத்தில் பார்த்தான் ,கொல்லைப்புறம் கதவு திறந்திருந்தது . அப்பா ஒரு நிமிஷம் ” என்று இழுத்தான் குரலை. பிரகாஷ் இருட்டில் பொறுமையாக வந்து மெழுகை எடுத்து கோமதி இருந்த அறைக்கு சென்றான் . பின் புரம் கதவு பாதியாக திறந்திருந்தது . மிகுந்த சத்தத்துடன் இடி , மின்னல் ,மழை துளி எல்லாமும் ரத்தினம் மேல் வீழ்ந்தது . ‘ஓடிக்கொண்டே வந்தான் , கையை தலை மேல் வைத்து , சிறு மழை துளியை வாயில் குடித்து, தொலைவில் ஒரு ஆள மரம் இருந்துது , அங்கே போய்விடுவோம் என்று ஓடினான் . ஆள மரம் கீழ் பொய் நின்றான் . மழை சற்று நிற்கும் போல் இருந்தது. தொலைவில் ஒரு கும்பலாய் சீலர்கள் வருவதை கண்டான் . அவர் ஒவ்வருவரும் கை கோர்த்து நடந்து வந்தார்கள். ஒரு குறிப்பான இடம் வந்தவுடன் அதில் இருந்த எல்லோரும் ஓவருவராக ,பிரிய துடங்கினார்கள் . அதில் ஒருவன் ரத்தினம் நோக்கி வரும்போல் இருந்துது . இவன் அருகே வந்து நின்றான் . இவன் சற்று நகர்ந்து கொண்டான் . அவன் திரும்பி பார்த்து ‘ நானும் மனுஷன் தான் ” ஏன் தள்ளி போறீங்க ? அவன் எதுவும் சொல்லாமல் நின்றான் . இந்தாங்க போன் , உங்களுக்கு பேசணும் இல்லையா,உங்க நண்பன் கிட்ட . ரத்தினம் ஆச்சிரிமாய் வியர்தான் . இந்தாங்க என்று போன்-ஐ நீற்றினான் , யோசனையுடன் வாங்கிக்கொண்டு , எண்களை தட்டினான் , ரிங் போய் நின்று போனது . சரி வாங்க போலாம் ன்று ரத்தினத்தை அழைத்தான் , எங்க என்று கேட்டான் ரத்தினம் ? சொல்றேன் வாங்க என்று கையை பிடித்து கூட்டி சென்றான் . இருவரும் நடக்க துடங்கினார்கள். சார் நீங்க சாப்டீங்களா ? என்னையா சார் என்று ரத்னம் கேட்டான் . ஆம் உங்கள தான் . சாப்பிட்டேன் சார் . ஓஹோ , சரி வாங்க போலாம் . நீங்க போன் போடீங்களே . அவர் யாரு ? உங்களுக்கு பிரச்னை இருக்கு .
ரத்தினம் அவரை பார்த்து “ரெண்டு நாள் ஆச்சு சார் , நா ஒரு எடத்துல நின்னு பேசி, ஒரு தப்பான பேரோட சுத்திட் இருக்கேன் . உங்களுக்கு வந்த பெரு , அது அவ்ளவ் சுலபமா உங்கள விட்டு போகாது சாமி , வழியில் நாய் ஒன்று வந்தது , அதற்க்கு இந்த ஆள் , பிஸ்கட் போட்டார் , அது சாப்பிட்டு இவரை பார்த்தது , தூரே கை காமித்தார் ,அது ஓடியது அந்த இடத்திர்ற்கு . இவனுக்கு எல்லாம் ஆச்சிரிமாய் இருந்துது . என்ன பெரு ? கெட்டவனா , கொலையாளியா ? ஊர கெடுத்தவனா ? சொல்லுங்க . கிட்டத்தட்ட ஊருக்கு கெட்டப்பேரு வாங்கி குடுத்தேன்னு சொல்றாங்க .நீங்க ஊருக்கு ஒரு நல்லது பண்ணீங்க , ஆனா அது ஊருக்கு புரியலா ,உங்கள மதிக்கலா . நீங்க ஒரு சுயநலவாதியா இருந்திருக்கணும் ,இப்போ பாருங்க ,எப்படி அலையவிட்டாங்கனு . உயிர் ரொம்ப முக்கியம் ஒரு மனுஷனுக்கு , நீங்க அன்னிக்கி பண்ண காரியத்துக்கு உயிர் தப்பியது பெருசு ,இப்போ ஊரு உங்கள பட்ட பெரு ‘திருடன்னு “வெச்சாங்க இல்லையா ? ரத்தினம் ஆமாம் என்று தலை ஆட்டினான் .ஒரு ஆள் இவரிடம் வந்து காதில் எதையோ சொன்னான் . இவர் உடனே ‘ பாத்துக்கலாம் , உம்மக் யாரு சொன்னா ? ராஜு சார் , அவரு தான் சொன்னாரு .சரி நீ போ ,பாத்துக்கலாம் என்று வழி அனுப்பினார் .வாங்க ரத்தினம் நம்ப போவோம் என்று நடக்கா துடங்கினானார்கள் . சொல்லுங்க ரத்தினம் . ஊருக்குள்ள நீங்க இனிமே போனா , என்ன பண்ணுவாங்க ? உங்களுக்காக காத்துக்கிட் இருந்த தலைவர் பொறுப்ப உங்ககிட்ட குடுப்பங்களா , இல்லா நீங்க நினைச்ச வலைல எல்லா மீனும் சிக்குமா ? ரத்தினம் மௌனமாக வந்தான் . தெரு ஓரம் இருந்த டிபன் கடைக்கு நுழைந்தார்கள் . என்ன சாப்பிடறீங்க ரத்தினம் ? பரவலா சார் . வேணாம் எதுவும் . நீங்க சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சு , ஓட்றத்துக் தெம்பு இருக்கணும்ல .டேய் தம்பி , ஒரு பரோட்டா எடுத்துட்டு வா சாருக்கு . ரத்தினம் ஆசிரியமாய் பார்த்தான்.’ இவருக்கு எப்படி எல்லாமே ‘ தெரியுது .யார் இவர் ? திடிர்னு வந்து நினார் , வாங்கனு கூப்பிட்டார் , சரினு வந்தா எல்லாமே சொல்றாரே . யோசித்து கொண்டே ஒரு பரோட்டாவை பித்து வாயில் போடாமல் கையில் பிசைந்து கீழே போட்டான் .தொல்லை தட்டி , தம்பி நினைவுக்கு வாங்க என்று கூட இருந்தவர் சொன்னார்.இது நினைவு தான் , கனவு இல்ல என்றார் . உள்ளே இருந்து ஒரு சர்வர் வந்து இந்தாங்க இன்னொன்னு சாப்பிடுங்க என்று வந்து பரோட்டவை வைத்தான் .எனக்கு ப்ரோட்டா புடிக்கும்னு உங்களுக்கு எப்படி தெரியும் சார் ? கேள்விகள் வேண்டாம் , இருக்கும், நொடியை சுவாரஸ்யமாய் வாழ்ந்துவிடு. குருமாவை ஊத்தி சாப்பிடுங்க . ரெண்டு நாள் சாப்பிடாமல் இருந்தது , பரோட்டா காத்து போல் காலி ஆனது .சாப்பிட்டு வெளி வந்தான் , சாப்பிட்ட பிறகு திடீர் பலம் வந்தது போல் , குரலை எழும்பி “உங்க பெரு என்ன ? என்றான் . அவர் திரும்பி பார்த்து சிறிதாய் சிரித்து ‘ தூதுவன் என்றார் “தூதுவண்ணா அப்படீன்னா ? வாங்க போலாம் என்று அவரை அழைத்து சென்றார் . தூதுவன் : அரை மணி நேரத்துல நம்ப இடத்துக்கு போயிடுவோம் , நீங்க அங்க கொஞ்ச ஒய்வு எடுத்துக்கோங்க , அதுக்கு அப்புறம் … ரத்தினம் நிறுத்தினான் , சார் நா எதுக்கு அங்க வரணும் . நீங்க யாரு ? நா உங்கள எங்க இடத்துக்கு கூட்டிட்டு போறேன் , அங்க தான் உங்களுக்கான செய்தி இருக்கு . அதா நீங்க பாக்கணும். என்ன செய்தி ? அது அங்க போனாதான் தெரியும்.அது வரைக்கும் என் கையை விடாதீங்க . நடந்து வந்துகொண்டிருக்கையில், ஒரு வயதானவர் எதிரில் வந்தார் . தூதுவன் அவர் முன்னே நின்று கை கூப்பி “ரத்தினத்தையும் வணங்க சொன்னான் , அவன் முழித்தான் , இவரே அவன் கையை பிடித்து வணங்க செய்தார் ” அய்யா உங்களுக்கு ஒரு செய்தி என்று அந்த வயதானவரிடம் சொன்னார் தூதுவன் ” நீங்க நினைக்கிற மாதிரி எல்லாமே நல்லா படிய நடக்கும் அய்யா , உங்க வீட்ல நடக்கற முதல் பண்டிகை ரொம்ப வருஷத்துக்கு பிறகு, உங்க பையனோட கொலை கேஸ் , பொண்ணோட வெகு நாள் கஷ்டம் , எல்லாமே தீர்ந்துடும் , நீங்க கவலை படமா போங்க என்று சொல்லி ” அங்கே இருந்து நடக்க துடங்கினார்கள் . அந்த வயதானவர் ஆச்சிரிமாய் பார்த்தார் ” வழியில் இது போன்று சிலரிடம் ஒவ்வரு செயதியை சொன்னார் , பலர் ஆச்சிரிய பட்டார்கள் , ஒரு சிலர் “பைத்தியம் என்று திட்டினார்கள் “
ரத்தினம் பிரமித்து போனான். லேசாக மழை தூர ஆரமித்தது ” ரத்தினம் அவரிடம் ‘ என்னைக் அடுத்து என்ன செய்தி வெச்சிருக்கீங்க என்று கேட்டான் “இவர் அவனை பார்த்து சிரித்து தோல் மேல் கை வைத்தார் . மழை ஆரமித்தது . இவர்கள் நடந்து வந்து கொண்டிருக்கையில் ஒரு சிலர் பேசுவது கேட்டது ‘ நீ அன்னிக்கே சொல்லி இருந்தேன்னா .இப்போ இவ்ளவ் பெரிய பிரச்னை வந்திருக்காது . இப்போ பாரு நீ ஒன்னு நினச்சா , ஆனா உன் வாழ்க்கை எல்லாத்தயும் மாத்திடுச்சு. தூதுவன் ரத்தினத்தை பார்த்தான், நடந்து செல்கயில், இன்னும் சில குரல் கேட்டது, நீ அவனை நம்பி எங்களை விட்டு போன , இப்போ அவன் இல்லனு எங்ககிட்ட திரும்பி வந்திருக்க , நீ உன்னைக் உண்மையா இந்தம்மா , அது வரைக்கும் போதும். தூதுவன் ரத்தினத்தை பார்த்தான் .தூதுவன் பார்வை ரத்தினத்தை சற்று குழபத்தில் இறக்கியது. நடந்து செல்கயில், இன்னும் சில குரல் கேட்டது தூதுவன் ரத்தினத்தை பார்த்தான் இவளவு மழைலையும் ஒருத்தன் அங்க நிக்கறான் பாருங்க , ஆள பாத்தா பெரிய எடுத்து பய்யன் மாறி தெரியிறான் , ஆனா அவன் மூஞ்சீல ஒரு பதட்டம் , ஒரு குற்ற உணர்ச்சி இருக்கு பாருங்க , கூட அவன் நினச்சுது நடக்கலேன்னு வேற வருத்தம் , தெரியுதா ? தூதுவன் சொல்வது அத்தனையும் அவன் முகத்தில் தெரிந்தது , ஆமா என்றான் . அவர்கிட்ட பொய் 2பி பஸ் வருமான்னு கேக்கலாமா என்றார் தூதுவன் ? ரத்தினம் முகத்தில் ஒரு முறைப்பு வந்தது . வாங்க போவோம் அவர்கிட்ட என்று இவரை இழித்து சென்றான் .
சார் , உங்களுக்கு ஏதாவது உதவி வேணுமா ? நீங்க ஏதோ பிரச்சனைல இருக்கீங்கா ? அவன் ஒரு பக்கம் யாரு இவன் என்று யோசித்தான் , பேச விருப்பம் இல்லையா உங்களுக்கு என்று தூதுவன் கேட்டான், அவன் கோபமாய் ‘ கொஞ்ச தொந்தரவ்வு ‘ பண்ணாம நீங்க பொங்கா என்று சொன்னார். தூதுவன் “sorry for the trouble ” என்று சொல்லி திரும்பி செல்ல துடங்கினான் . இரு குரல் கேட்டது ” வா ஸ்டேஷன்க்கு ‘ நீதான் அந்தஆளா அடையலாம் காட்டணும் என்று காவலர்கள் அவனை அழைத்து செல்வதை ரத்தினம் பார்த்தான்” தூதுவன் சிரித்தான் . போலாமா சார் என்று ரத்தினத்தை பார்த்து கேட்டார் . அவன் தலை அசைத்தான் . என்ன ரத்தினம் , புரியலையா ?
நீங்க அங்க பாத்தா மாரி தான் நம்ப வாழ்க்கையும் .ஒன்னு நினைப்போம், ஆனா அப்படி நடக்காது , அது எப்படி போதோ , அப்படித்தான் போகும் .தீர்மானமா பண்ணனும்னு நினைப்போம், ஆனா ஒரு சின்ன அலட்சியம் இல்ல ஆசை இல்ல வெவேறு சிந்தனைகள் இருந்ததால மாறிடுவோம் , அப்படியும் இல்லனா ‘விதின்னு ” ஒன்னு சொல்லுவோம் ‘ அதுதான் நம்ப பாதுகாப்பான தோழன் , ஆது நம்பள பாத்துக்கும்னு இருக்கனும்.ஆனா நம்ப அத மாத்தானும்னு ஓடுவோம்..அதுவும் விளையாடும் நம்மளோட .ரத்தினம் கேட்டு கொண்டே வந்தான் , சாலை சற்று வேறுமாதிரி இருந்தது . அவன் தூதுவனை கண்டான் , வந்துட்டோம் ரத்தினம், நம்ப இடத்துக்கு . நடந்து வந்து மைதானத்தை கடந்து, ஒரு ஆளா மரத்தடியில் பொய் நின்றார்கள்.
அவர்கள் இடத்தை நோக்கி ஒரு நான்கைந்து பேர் வந்து கொண்டிருந்தார்கள் கை கோர்த்து. அவர்கள் கருப்பு உடை அணிந்து கையில் ஒவ்வருவரும் தாள் வைத்திருந்தார்கள் . இவர்களிடம் வந்து ‘வணங்கினார்கள் ” . தூதுவன் ” போலாம்” தோழர்களே என்று கை பிடித்து எல்லோரும் புறப்பட்டார்கள். சிறிது நிமிடங்களில் ஒரு அறையை நோக்கி வந்தார்கள், ஆள் நடமாட்டம் இல்லை அங்கே, பெரும் அமைதி , அறையின் நுழைவால் ஒரு முதலையின் வாய் போல் இருந்தது, அதற்குள் எல்லோரும் நுழைந்தார்கள். ரத்தினம் முழித்து கொண்டே உள்ளே போனான் . அரை , மிக பெரிய அரை .வெறும் அரை. தூதுவரின் தோழன் ஒருவன் இவனை அழைத்து’ என் கூட வாங்க என்று அழைத்து சென்றான் ‘. இங்க நீங்க ஒய்வு எடுத்துக்கோங்க,கொஞ்ச நேரம் . ஒரு நிமிஷம் ‘ என் கூட ஒருத்தர் வந்தாரே , அதான் உங்க தலைவர்” தப்பா சொன்னேனா ‘மன்னிக்க்கோங்க ‘, என்னைக் அவர் யாரு எங்க இருந்து வந்தார், எப்படி என்ன பார்த்தார், எதுக்கு இங்க கூடி வந்தார்னு தெர்ல , நீங்க பண்ற ஒவ்வரு காரியமும் ஆச்சிரியம் இருக்கு,கொஞ்ச பயமா இருக்கு. என்னைக் அடுத்து என்னனு கேட்டேன், அவர் சொல்லல , நீங்க சொல்லுங்க. தோழன்: அவரை நீங்கள்”தூதுவன்” என்று அழையுங்கள் , என்று சிரித்து வெளியே சென்றார்.
சிறிது நேரம் தூங்கினான் , ‘ “ரத்தினம் நீ நண்பன் கூப்பிட்ட அப்பவே பொய் இருக்கனும்” தப்பு பண்ணிட்டா ‘ . போலீஸ் உன்ன தேடுது பாரு” பதறி எழுந்தான் தூக்கத்தில் இருந்து.பக்கத்தில் ஒரு கப்பில் டி, மரு கப்பில் காபி , மாரு கப்பில் மது இருந்துது . எது வேணாலும் எடுத்துக்கோங்க என்று ஒரு பெண் சொன்னால் , இவன் டி எடுத்து நன்றி சொன்னான் ,அவள் ஒடனே வெளி ஏறினால் . டி குடித்து அறையை விட்டு வெளியே வந்தான் . யாரும் இல்லை, தோழர்கள் இல்லை,தூதுவன் இல்லை . அரை மிக அமைதியாய் இருந்தது , எல்லோரும் எங்கே சென்றார்கள் தெரியவில்லை , யோசித்துக்கொண்டே அவன் அறைக்கே திரும்பி வந்தான் .ஒரு காகிதம் இருந்தது . அதில்’ பின் மைதானத்திற்கு வரவேண்டும்’ என்று எழுதி இருந்தது .பின்புறத்திற்கு சென்றான் . தூதுவனும் தோழர்களும் உட்கார்ந்திருந்தார்கள் . வாங்க ரத்தினம் , உங்கள தான் எதிர்பாத்தோம் , உட்காருங்க . என்ன முடிவு பண்ணி இருகீக்ங்க என்று தூதுவன் கேட்டார் .எதுவும் முடிவு பண்ணலேங்க , என்னைக் உங்க எல்லாரையும் பாத்தாலே கனவு மாறி இருக்கு. தூதுவன் அதற்கு பதில் செல்லாமல் , ரத்தினத்தை பற்றி பேசினான் நேத்திக்கி நம்ப பார்த்த சூழல் வேற , ஆனா அவங்க பண்ணனும்னு நினச்சுது ஒன்னு , ஆனா நடந்தது ஒன்னு. வர வழிலா பார்த்த அந்த பய்யன் ஆகட்டும்.அந்த பய்யன் நெத்தி எங்க போனும்னு நினைச்சானோ அங்க போகதத்த போறான், ஆனா நெத்தி இல்ல, வேற எபேயோ . அதுதான் உங்க வாழ்க்கையும் , நீங்க நல்ல காரியம் பண்ணீங்க , ஆனா அது உங்களுக்கு கேட்ட பெரு வாங்கி குடுத்திச்சு , எங்க போலிஸ்ட்டா போனா வாழ்க்கை ரொம்ப மாறிடும்னு அங்க இருந்து தப்பிச்சீங்க ஆனா இப்போ இன்னு கேட்ட பேருதான் வந்தது .போலிஸ்ட்ட இருந்து வெளி வந்தீங்களே சந்தோஷமாவ இருந்தீங்க ? இல்ல .கோவில்லா கேட்ட பெரு வாங்கினீங்க , உங்களுக்கு உதவின வீட்ல இருந்து தப்பிச்சு , மழைல, இடையில தெருவுல சூத்தினீங்க திருடன்னு பேரோட .அன்னிக்கி படகுல உங்க மீனு தொலைஞ்சு போச்சு, அதோட உங்க ஸ்நேகிதியும் தொலைஞ்சு போனா இல்லையா ?செல்வி .உங்க சிநேகிதி, தோழி, எல்லாமும்.நிஜத்துல நீங்க இருந்தீங்கனா இது எல்லாமே மாறி இருக்கும்.
அப்போ நா பண்ணினது தப்பா ? போலிஸ்ட்ட போன எல்லாம் சரி ஆயிடுமா ?அதுவும் சொல்ல முடியாது , அவங்க உங்கள புரிஞ்சிரிந்திருப்பாங்களானு தெரியாது. ஆனா உங்க மனசுக்கு நீங்க உண்மையா இருந்திருப்பீங்க ,எதையும் தைரியமா எதிர்கொள்ளணும், ஒரு விஷயத்துல இருந்து ஓடினா, இந்நோன்ல சிக்கிப்போம், அடுத்து அதுல இருந்து ஓடுவோம்.இப்படியே ஓடிண்டே இருப்போம்.வாழ்க்கை முழுவதும்.உங்க வாழ்க்கைல இது ஒரு ஆரம்பமா கூட இருக்கலாம். இப்போ என்ன பண்ண சொல்றீங்க எண்ணெயை ? உங்களுக்கான வழி ,செய்தி,விளக்கம் எல்லாம் இந்த தாளில் இருக்கு, இதை நீங்க பாத்துக்கலாம். நன்றி என்று சொல்லி எல்லோரும் திரும்பி நடக்க துடங்கினார்கள் எல்லோரும் நேராக நடந்தார்கள்,சிறிது தூரம் போன பிறவு மறைந்தார்கள். அவர்கள் சென்றதும் , தூதுவன் குடுத்த தாளை பிரித்தான் . புத்தகம் போல் இருந்துது.முதல் பக்கத்தில் வழி என்று எழுதி இருந்துது .வழியை பார்த்தான் .அவனுக்கு தெரிந்த பாதை தான் இருந்தது , அதை நோக்கி நடந்தான் , தூதுவன் கேட்ட கேள்விகள் நினைவில் இருந்தது . நம்ப பண்ணினது சரியா தப்பான்னு தெரியல ?ஆனா அவங்க சொன்ன மாறி , ஒழுங்கா அங்கேயே இருந்திருந்தா உண்மையா இருந்திப்போமோ ?இப்போ உண்மையாவும் இல்ல , நிம்மதியும் இல்ல , ஏன் ? இல்ல இந்த நினைப்பும் அவங்க சொன்னதால வந்த குழப்பமா ?என்று கேள்விகள் கேட்டு கொண்டே வந்தான் .ஒரு இடத்திற்கு வந்து தாளை பார்த்தான் , நேராக பொய் ,இடது புறம் திரும்பி ,அரை மைல் சென்றால் , உங்கள் இடம் வந்துவிடும். அதை பார்த்து கொண்டே நடந்தான் . செயதி தாளை பார்த்தான் அடுத்து -உங்கள் பெயரும் படமும் காவல் நிலையத்தில் வைக்க பட்டுள்ளது ,உங்கள் ஊரில் இருந்து நீக்க பட்டீர்கள் – சாட்சி சொல்ல ஒரு பெண்ணும், பாட்டியும் இருக்கிறார்கள்.
அதை கண்டவுடன் பதறினான் . இடது புறம் திரும்பி அரை மைல் வந்தான் .ஒரு இடத்தில் முட்டி போட்டு உட்கார்தான் , கடைசி வழியை பார்த்தான் -அரை மைல் தூரத்தில் உங்கள் இடம் இருக்கும் என்று எழுதி இருந்தது.எழுந்து அந்த இடத்தை நோக்கி நடந்தான் – சில நிமிடங்களில் தூரத்தில் “இருவர் கையில் துப்பாக்கியை வைத்து அசையாமல் நின்று கொண்டிருந்தார்கள் .பொறுமையாய் அந்த இடத்திற்கு நடக்க துடங்கினான் , “அங்கே காவல் நிலையம்” என்று பலகையில் எழுதி இருந்தது. நடந்து வந்தான் காவல் நிலையத்திற்கு. காவல் நிலையத்திற்குள் சென்றான். எல்லோரும் இவனை பார்த்தார்கள், வழி விட்டார்கள். உள்ளே சென்று அங்கே இருந்த இன்ஸ்பெக்டரிடம் பொய் ‘ நா தான் ரத்தினம் என்று சொன்னான்.இன்ஸ்பெக்டர் எழுந்தார் ” பலராமன் உள்ளே இருந்து வந்து டப்பென்று ரத்தினத்தை நெற்றியில் சுட்டார் , கீழே விழுந்து இறந்து போனான் ரத்தினம்….
தூதுவன் ஒரு ஆள மரத்தடியில் அமர்ந்து கடிதம் எழுதி கொண்டிருந்தான். “ரத்தினம் இறந்து விட்டான் , அவனை தேடி நாங்கள் செல்கிறோம் ,” ஆகையால் அவனும் இன்று முதல் ஒரு …. ” தூதுவன் ” கடிதம் பறந்து போனது





Comments