top of page

Readers Write In #627: அலாரம்- short story

  • Writer: Trinity Auditorium
    Trinity Auditorium
  • Sep 13, 2023
  • 2 min read

By Soorya N

உதவி தேவை

வாசன் “காலை டிபனை” சாப்பிடாமல் , மதியம் அதை சாப்பிட்டு , மதியம் இரண்டரை மணிக்கு தன் காதலியான செண்பகத்தை காணுவதற்காக அலாரம் வைத்து தூங்கினான் .

“எழுப்ப மறந்துவிடாதீர்கள் “அவனை ..

இரண்டரை மணி ஆனது , கோழி கூவும் சப்தம் அவன் போனில் கேட்டது . அதை பதினைந்து நிமிடம் ஒத்திவைத்தான்.

“இரண்டேமுக்கால்”- ஆனது , அதை அடுத்த பதினைந்து நிமிடம் ஒத்திவைத்தான்

“மூன்று மணி”-ஆனது .

மூன்று எட்டுக்கு எழுந்தான், எழுந்து , என்னுடன் பேசினான் .

நீங்க யாரு என்று என்னை கேட்டான் ? நானா என்றேன் .

ஆமா , “நீ யாரு” என்று வார்த்தை மாறியது ? நா வந்து ….அதற்குள் அவன் சரி இரு, என்னைக் ஒரு வேலை இருக்கு என்று எழுந்து போனான். சரி , அவன் போனா போட்டும் , நான் உங்ககிட்ட சொல்றேன்..

அவன் பெரு

“வாசன் ! கொஞ்ச லூசு மாறி பேசுவான், பழுக தெரியாத ஒரு உயிரினம் அது . ஆனா நல்ல பையன்தான் .ஒரே ஒரு பிரச்சனை இப்போதிக்கு என்னனா , அவனோட அலாரம் தான் , அதுல என்ன பிரச்னைனு எனக்கும் தெரியாது , நம்ப அத அவன்கிட்டயே கேட்போம் .

ஆனா அவன் இந்த மேஜெயல எழுதி வெச்சிருக்கான் ஒரு கடிதம் , என்னனு பாப்போம் .

மூன்ற மணிக்கு” என்று எழுத பட்டிருந்தது ….

“செண்பகத்தை பாக்கணும் . காதல் கடிதம் குடுக்கணும் .

சிரிச்சாலே அவ கன்னத்துல குழி விழும்” பேசினா இசையா இருக்கும், அவ ஒரு பார்வை பாத்தாலே போதும் நெஞ்சுலா நெஞ்சுள , நெஞ்சுல ________ (மறந்துவிட்டான்) பிறவு எழுதுவான் என்று நினைக்கிறன் .

‘மறக்காம’ குடிக்கணும்”. சாரி , குடுக்கணும்னுட்றத மாத்தி படிச்சிட்டேன் .மன்னிக்கவும் .

நானும் அவளும் ரொம்ப நாளாவே பேசிட் இருக்கோம், என்னைக் அவளையும், அவளுக்கு என்னையும் பிடிச்சிருக்கு, ஆனா ஒரு சில நாட்கள்நாலா ,ஒரு சில காட்சிகள் நடந்ததால் ,என்னோட காதலை அவளிடம் சொல்ல முடியவில்லை . என்னோட ஒரு பிரச்சனைநாலா அவ என்ன ஏத்துபாலனு தெரியல .

உதாரணங்கள்

௧. ஒரு ஞாற்றுக்கிழமை அன்று நான் அவளை யார் என்று கேட்டுவிட்டேன் . என் அடிமூளைக்கு ஞாபக வரவில்லை .இடியட் என்று திட்டி சென்றால் . முதல் அத்தியத்தின் தோல்வி காட்சி .

௨ . அவள் பிறந்தநாள் அன்று ‘ நான் அவள் வீடு வரைக்கும் சென்று – “அதற்க்கு முன்பு , ஒரு சிறிய விளக்கம் – “அவள் வீட்டில் என்னை பற்றி எல்லோரிடமும் அவள் சொல்லி இருக்கிறாள் ” நான் யார் என்று சொல்லி இருக்கிறாள் , ஆனால் …… நான் அவள் வீட்டுக் சென்று ” சார், இது ரெண்டாம் நம்பர் வீடு தானே என்று கேட்டான் இல்லை என்று சொன்னார்கள் , மன்னித்து விடுங்கள் , நான் மாரி வந்து விட்டேன் என்று ஓடி வந்தேன் .

எல்லாம் சொன்னால் அவள், என்னைக் தேவை படும் உதவியை சொல்லவில்லை.

௩ . அவளுடன் நான் ஒருமுறை ஜவுளி கடைக்கு சென்றபோது, நான் அவளுக்கு எல்லா ஜவுகளையும் வாங்கி குடுத்தேன், அனால் பின் பாக்கட்டில் பர்ஸை வைக்க மறந்துவிட்டேன்.

கீழே போனவனை காணும் என்று நான் கீழே இறங்கி பார்த்தேன் .

அவர்களுடன் பேசி கொண்டிருக்கிறான் .

யாருடன் ? அவரின் கூடும்பத்துடன் . மேலே அவனின் கடிதத்தை மறந்தான் .

செண்பகம் வந்திருப்பாளே என்று நான் மேலே ஓடி அலாரத்தை கத்த செய்தேன் . அதை கேட்டவுடன் , கீழே இருந்து மேலே ஓடி வந்தான் , அலாரம் தலையை தட்டி , கீழே இருந்த தாளை பார்த்தான் .

அட ச்சா ! மறந்துட்டேனே , பாவம் செண்பகம் வந்திருப்பாளே ! ரொம்ப நேரம் ஆயிடிச்சே .நாந்தான் மறந்து போய்ட்டேன் நீங்க யாரவது என்னிடம் ஞாபக படுத்த கூடாதா ? என்னை அவன் பார்க்கவில்லை, நான் மறைந்து நின்றேன் .

நான்தான் இந்த கதையை படிக்க ஆரம்பிக்க முன்னாடியே எழுதினிருப்பேனே ? மறந்து விடீர்களா ?

போங்க பொய் பாருங்க!

 
 
 

Comments


Post: Blog2_Post

Subscribe Form

Thanks for submitting!

(213) 270-2839

©2022 by Hayat Hotel. Proudly created with Wix.com

bottom of page