Readers Write In #640: ஒருவழிப்பாதை
- Trinity Auditorium

- Nov 8, 2023
- 3 min read
By Soorya N
டேய் ! சொன்னா கேளுடா ! போகாத . நாளைக்கு அண்ணனும் வந்துரட்டும், ஒண்ணா போலாம். டேய் பிடிவாதம் பிடிக்காத. எனக்கு அந்த மலைக்கு எப்படி போகணும்னே தெரியாது .
நீ வந்தா வா, நா போறேன் . நீ வாடா என்று இன்னொருவனை அழைத்து சென்றான்.
மலையில் ஏறிக் கொண்டே பேசினான் “தரணி”. இந்த பார்.எப்பவும் நான் தான் உனக்கு தலைவன். நீ ஏதாவது என்னைய கேக்காம பண்ண, அப்புறம் நா கோபப்பட்டு தான் ஆகணும். சொல்லிட்டேன் பாத்துக்கோ.
போடா லூசு பயலே என்று கூடவந்தவன் சொல்லிவிட்டு அவனை விட்டு புறப்பட்டான்.
உன் கூட எல்லாம் , எவன் வருவான் ! நீ பாட்டுக்கு எண்ணெயை தள்ளிவிட்டாலும் விட்டுடுவா என்று சொல்லிக்கொண்டே அவன் திரும்பி சென்றான். இவன் மட்டும் மலைபாதையில் ஏறினான் . மலை வளைவு இல்லாமலேயே இருந்தது. நேராக போய்க்கொண்டே இருந்துது. இவனும் எதையும் கவனிக்காமல் நடந்தான்.மலை உச்சியில் போயி நின்றான்.
திரும்பி பார்த்தான், அவன் வந்த பாதையை தேடின்னான்.
கொஞ்ச மாதங்கள் பிறகு.
என் பெயர் தரணி. ஒரு மாதம் மட்டும் வாழ்க்கையில் நல்ல புள்ளையா இருந்தேன்.அப்படி நா இருந்ததால் ஒரு பிரச்னையில் சிக்கி கொண்டேன்.
தரணியின் பிரச்சனை!
பலமுறை யோசித்தேன், நான் இந்த முடிவை எடுக்கும் முன்பு .இதனால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று நம்பினேன் . எல்லோரும் “உண்மையாக இரு என்று சொல்வார்கள் என்று நினைத்தேன் ” ஆனால் , அவர்களுக்கு உண்மை வேண்டாம் போய்தான் வேண்டும் என்றார்கள் . இனி இதுதான் நிஜம், இதுதான் உண்மை , உன்னக்கு இதுதான் நன்மை
என்றெல்லாம் பெயர் வைத்தார்கள் .
யாரும் என்னால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று நினைத்தால், எல்லோருக்கும் பாதிப்பு ஏற்பட்டது.
நான் வேண்டிக்கொண்டேன் என் இஷ்ட தேவதையிடம் ! நான் கொஞ்ச நாட்கள் நல்ல தரணியாக இருந்தது மிக தவறாக தெரிந்தால் ,நான் வாழ்ந்த பழைய மனிதனாக மாறிவிடுவேன் என்று. என் சாமியும் பூவை கீழே போட்டு சம்மதம் சொன்னது. அதனால்தான் நானும் பொறுமையாக இருந்தேன்.
ஆனால் என்னை என் சாமியும் ஏமாற்றியது , எம் மக்களும் ஏமாற்றிவிட்டார்கள்
நான் தரணி.சாதாரண தரணி . நான் ஏன் இப்படி வாழ வேண்டும் . எதற்காக இப்படி முகமூடி போட்டு வாழ வேண்டும் ?
என்னை பற்றி தவறான செய்தியை பார்த்து எல்லோரும் நம்பிவிட்டார்கள் .நீங்களும் நம்பிவிடாதீர்கள்.
தரணி என்றால் அன்பு , தரணி என்றால் பணிவு , தரணி என்றால் ஒழுக்கம் .இவரை போல் யாரும் இல்லை. ஒழுக்கத்தின் மறுபிறவியே நீதான். பொறுப்பை பற்றி நாங்கள் உன்னைக் சொல்ல வேண்டாம் .பொறுப்பின் உயிரே நீதானே . உன்னை போயி நாங்கள் நம்பாமல் இருந்தால் மனுஷனே இல்லை என்கிறார்கள்.
கொஞ்சம் மாதங்கள் முன்பு வரைக்கும்…
தரணி என்றால் வெறுப்பு. தரணி என்றால் பொறுமை இல்லாதவன் .தரணி ஒரு ஒழுக்கம் கெட்டவன். தரணி இருந்தால் இந்த ஊரு நாசம் ஆகிவிடும். குழந்தைகளுக்கு எல்லாம் ஆபத்து வந்துவிடும். இவனை நாங்கள் இந்த ஊரில் வாழ விட்டால் , நாங்க எங்கள் தலையில் மண்ணை வாரி போட்டுக்கருத்துக்கு சமம் என்கிறார்கள். எனக்கு உல்லாசமாய் இருந்தது, என்னை ஒவ்வொருத்தரும் திட்டும்போதும், நான் அவர்களுக்கு பயத்தை காட்டும் போதும்.
ஆனா, தெரியாம நா நல்லவன் ஆயிட்டேன். ரொம்ப கஷ்டமா இருக்கு.
நீ ஒரு மாசத்துக்கு நல்லவனா இரு என்று என்னக்கு சொன்னாங்க. யார் சொன்னாங்கன்னு தெரியல. அன்னிக்கி நா அந்த மலைல ஏறும்போது, என் கூட யாரும் வரல, ஆனா , அது மலை மாதிரி தெரியல எனக்கு . வழி நேரா போச்சு. மக்கள் இருந்தாங்க. எல்லோரும் என்ன பாத்து பயந்தாங்க, திட்டினாங்க ,குழந்தைங்க எல்லாம் ஓடினாங்க. நான் அவங்க பண்றத பாத்து ரொம்ப சந்தோஷப்பட்டேன். இவன் எதுக்கு இங்க வரான்னு கேட்கும்போது, என் மனசு குளிர்ந்தது. எல்லாரும் ஒதுங்கினாங்க. நான் மட்டும் நடந்தேன். ஒரு திமிரு ஒரு கர்வமாய் இருந்துது.
இப்போ பாத்தா ஊரு மொத்தமும், நீ இப்போ இருக்க பாரு, நல்லவனா ! இப்படியே இருந்துடுன்னு சொல்லுது.
ஒவ்வருத்தற்கும் ஒவ்வரு பாதை தேர்ந்தெடுக்குற நேரம் வரும்.
உங்க நேரம் இதுதான் தம்பி என்று ஊர்ல இருக்கிறவங்க எல்லாம் சொல்றாங்க.
நான் எப்படி இருந்தேன் ? சந்தோஷமா,தைரியமா, பொறுப்பே இல்லாமல் சுத்திட்டு இருந்தேன். தெரியாம அந்த மலைக்கு அன்னிக்கி போய்ட்டேன் .
நா பாட்டுக்கு ஊற சுத்திகிட்டு ஏமாத்திகிட்டு , ரெண்டு மூணு பெற பயம் காட்டிக்கிட்டு , தினமும் எழுந்தோமா ,சாப்பிட்டோமா, தூங்கினோமான்னு இருந்தேன் . நா ஏன் இப்படி மாறிட்டேன் எனக்கே தெரியல .ஒரு மாதம் இருக்க சொன்னாங்க , நான் ஒன்ற மாசமே இருந்துட்டேன் என்னைக் திரும்பவும் பழையபடி மாறனும். என்கிட்டே எவனும் வரக்கூடாது.
இப்பவே போறேன் அந்த மலைக்கு. அங்க போயிதானே நா இப்படி நல்லவனா மாறினேன் . நா திரும்பவும் அந்த மலைக்கே போறேன் என்று புறப்பட்டான்.அவனுக்கு அன்று வந்த வழி நன்றாக ஞாபகம் இருந்தது. இருந்தும் ,இப்பொழுது அவனுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. ஊர் மக்கள் எல்லோரும் இவனை பார்த்து சந்தோஷ பட்டுக்கொண்டே நடந்தார்கள். “எப்படி இருந்த புள்ள இது என்று ஒரு அம்மா அவன் முன்னாடி வந்து திருஷ்டி சுற்றினால். இவன பாத்தாலே நம்ப பயப்படுவோம் ,இப்போ பாரு , அவன் தான் நம்ப பாதுகாப்புன்னு சொல்றோம். அடக்கமா இருக்கான் என்று ஊர் மக்கள் சொன்னார்கள். இதே மலையில் அவன் நடந்து போகையில், இவனை கண்டாலே பயந்து ஒதுங்கிப்போன மக்கள், இன்று இவனுடன் சேர்ந்து நடந்தார்கள் . எல்லோரும் அவனை வாழ்த்தினார்கள்.
ஆனால், இவனுக்கு மட்டும் தான் தெரியும் அவன் மாறப்போகும் விஷயம் . அவன் உற்சாகத்துடன் , நடந்தான்.
அவன் நடக்க ,நடக்க பாதை நேராக போய்க்கொண்டே இருந்தத
அவனுக்கு அந்த மலை நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஆனால், அவன் ஏறிய பாதயே இப்பொழுது காணவில்லை என்று தேடினான். சுற்றி பார்த்தான், அந்த இடம்,அவன் அன்று வந்தது போல் இருக்கிறது , ஆனால் அது மலை இல்லை என்று தெரிகிறது. அங்கே இருந்த ஊர் மக்களிடம் கேட்டான். “இங்க ஒரு மலை இருக்குமே , அதுக்கு எப்படி போகணும் ? எந்த மலையை கேக்குற தம்பி ? அதான்னே, வழி நேராக போயிட்டே இருக்கும், எங்கேயும் திரும்பாது, அந்த மலைக்கு பெரு கூட…”. ஒரு பாதையா ? என்றார்
ஆமா அதுதான் என்னப்பா நீ . ரொம்ப தான் உனக்கு குசும்பு. போப்ப்பா என்று அவர் சொன்னார். அய்யா, சொல்லுங்க .அதுக்கு எப்படி போகணும் ? அட என்னப்பா நீ . இதுதானப்பா அந்த மலை என்று அவர் சிரித்துக் கொண்டே நடந்து போனார்.
அவன் அதிர்ச்சியடைந்தான் .





Comments