Readers Write In #647: அன்பெனும் ஆயுதம் ——நீயடா (a poem)
- Trinity Auditorium

- Dec 6, 2023
- 1 min read
By Soorya N
அன்பெனும் ஆயுதம் ——நீயடா
நான் உன்னை தேடி வந்தபோது, எழுதிய சிறு கடிதம் / காவியம் ….
*
“வா வா என் தோழனே”
“செல்லாதே எனை விட்டு ”
“வலிப்பது என் வாய் மட்டும் அல்ல, என் மனமும்தான்”உன்னை கூப்பிட்டு ”
“ஆரவாரம் இல்லாமல் அமைதியாய் நான் நின்றபோதும்
“யார் என்னை பார்ப்பார்கள் என்று நான் தேடியபோதும் ”
“,ஒரு சிலரின் குறி, என் மீது திரும்பியபோதும்”
“யார் என் மீது வால் வீசுவார்கள் என்று நான் பயந்தபோதும்”
“என் மனம் உதவியை கேட்டபோதும்”
“உன்னை தேடும் என் கண்களுக்கு என்ன காட்சி தருவாய்”
“உன்னைபற்றி நினைக்க தூண்டும் எந்தன் புத்திக்கு என்ன பதில் சேமிப்பாய்”
“உந்தன் பெயரை சொல்ல துடிக்கும் என் உதடுகளுக்கு என்ன வார்த்தை சொல்வாய்”
“நீ எங்கே என்று தேடும் எந்தன் ஏக்கத்துக்கு என்ன சந்தோஷம் வைத்திருக்கிறாய் ”
“வாதம் செய்யும் என் மனங்களுக்கு என்ன விடை எழுதுவாய் ”
உன்னை தேடி நடக்கும் என் கால்களுக்கு எந்த வழி காட்டுவாய்?
“பல சிரிப்புகள் உன்னால்தான் பிறக்கிறது”
“பல அழுகைகள் உந்தன் அலட்சியத்தால் வருந்துகிறது”
“பல கொள்கைகள் உன்னால் அழிகிறது”
“பல உருவுகள் உந்தன் பெயரை சொல்லி, போர் புரிகிறது”
நீ யார்?
நண்பனா ,எதிரியா , துரோகியா , பக்கத்துக்கு வீட்டு அக்கறை காட்டும் முனியாண்டியா !
அல்லது நீயும் எங்களை போல்தானா ?
நீ யார் ?
*
‘அன்புக்கு கண் இல்லை ‘
அன்புக்கு உடல் இல்லை”
“அன்புக்கு உருவம் இல்லை”
“அன்புக்கு அறிவும் இல்லை ”
உறவின் தொடக்க நாயகனும்!
உறவின் கடைசி நாயகனும் !
உறவுகளின் இதயமும் !
உறவுகளின் உயர்வும் !
உங்களது ஆயுதமே!
உதடுகளின் வார்த்தை – மாறினாலும்
மனதின் ஏக்கம் -வருந்தினாலும்
கண்களின் தேடல் – காணாமல்போனாலும்
புத்தியின் பதில் -மறந்து போனாலும்
உங்கள் ஆயுதம்தான் பொறுப்பு !
“நேரங்கள் ஏமாற்றினாலும் – விதிகள் மாறுவதில்லை!
மனங்கள் தடுமாறினாலும் – உறவுகள் வருந்தப்போவதில்லை.
வார்த்தைகள் கொட்டினாலும் – வரிகள் மாற்றப்படுவதில்லை !
ஏக்கங்கள் கூடினாலும் -வலிகள் குறையப்போவதில்லை !
உதடுகள் திட்டினாலும் – பற்கள் உடையப்போவதில்லை !
சூழல்கள் மாறினாலும் -கதைகள் முடியப்போவதில்லை ”
“காற்றின் திசை மாறினாலும்- காற்று நிற்கப்போவதில்லை”
இதன் முடிவு
இதன் விடை
“விடைதான்” இந்த கடிதத்தை/காவியத்தை வாசிக்கிறது.
அ___பெ___ம் ___யு___ம் __ய___
(விடையை கண்டுபிடிக்க வெற்றிடங்களை நிரப்பவும்)





Comments