Readers Write In #665: மதன்-கௌரி
- Trinity Auditorium

- Feb 8, 2024
- 11 min read
By Soorya N
கௌரி மதனை திட்டிக்கொண்டிருந்தால்.
அண்ணா வீட்டுக்கு போனும்னு போன வாரமே சொல்லிருந்தேன் . கரெக்ட்டா களம்பரத்துக்கு ஒரு மன்னேரம் முன்னாடி வந்து , என்னைக் எதிர்பாராம ஒரு வேலை வந்துடிச்சுனு சொன்னா.நா அவர்கிட்ட என்ன சொல்றது ?
மதன் மனதில் நினைத்து கொண்டான் :
வேலை வந்திடிச்சுன்னே சொல்லேன்.என்ன கடிச்சுடுவாரா உங்க அண்ணா என்று நினைத்துக்கொண்டான் .அவர் தப்பா எடுத்துக்க மாட்டாரா மதன் ?
கல்யாணம் ஆகி ஒரு வருஷமாச்சு .இதோ இருக்கு,பக்கத்து தெருவுல, அங்கேயே நம்ப இப்போதான் போறோம். இப்பயும் ஏதாவது சொன்னா, அவர் என்ன நினைச்சுப்பார் . நீங்களே போன் பண்ணி சொல்லிடுங்க,கௌரி மட்டும் வருவான்னு . என்னைக் ஒரு எதிர்பாராத வேலை வந்திடிச்சு, அதையும் நீங்களே சொல்லிட்டு அப்பறம் கிளம்புங்க. எப்போப்பாத்தாலும் ,நா கூப்பிட்டா மட்டும் ஏதாவது சொல்லவேண்டியது .இதே உங்கா ஆத்துல கூப்ட்டான ஒடனே கலம்பவேண்டியது , இதுலஎண்ணெயைவேறதிட்டனும், லேட்டாகலம்பிட்டேன்ன்னு. .
மதன் : நானே அண்ணாகிட்ட சொல்றேன்மா . நீ கொஞ்சம் கடுகுமாரி வெடிக்காம இருந்தேன்னா ரொம்ப நன்னா இருக்கும் .சரவெடியே தேவலாம் போலருக்கு.
கௌரி முறைத்தாள் .
மதன்-:அண்ணனுக்கு போன் செய்தான் .
தேவி : சொல்லுங்க மதன், “அண்ணாஎன்னசொல்றார் . உங்கசகோதரஅண்ணாபிரஷாந்த், சொல்லாமலேயேவந்துட்டாராஆத்துக்குசர்ப்ரைஸ்ஆய்ட்டேளாஎன்றால் .
“தேவி- பிரஷாந்தின் , மனைவி . கௌரியின்அண்ணாபிரஷாந்த் “
மதன் : என்ன சொல்றீங்க தேவி . அவர் இங்க வரேன்னு எங்ககிட்ட சொல்லலையே .
தேவி : அப்படியா ?
அவர்அங்கதான்வந்திருக்காருன்னுநாநினைச்சிண்டுஇருக்கேன். நெத்திராத்திரிஅவர்அப்படித்தான்சொன்னார்ஏன்கிட்ட. அங்கவரலைன்னா , எங்கபோயிருப்பார்இவளவுகாலங்கார்த்தால.
மதன் : எப்போகிளம்பினார்தேவி ?
தேவி : ப்பா! நெத்திராத்திரிஎன்கிட்டேசொன்னது, உங்களபாத்துரொம்பநாள்ஆச்சு. ஒருஎட்டுபோய்பாத்துட்டுவந்துடுறேன்நார் .
நான்இன்னிக்கிகொஞ்சம்நேரம்தூங்கிபோய்ட்டேன், இப்போதான்எழுந்தேன், அதான்உங்களுக்குபோன்போட்டேன்.
ஆனா, நீங்கஅங்கவரலைன்னுசொல்றேளே. ஒருவேளை …
கௌரி : என்ன சொல்றார் ? யார் பேசினா ?
மதன் :தேவி பேசினாங்க அண்ணாஇங்கவரேன்னுசொல்லிருந்தாராம்நேத்திக்கி, காலைலகளம்பிட்டார்போலருக்கு. தேவிஇப்போதான்எழுந்தங்களாம்.. நம்மாத்துலஇருக்காருன்னுநினைச்சிண்டுஇருக்காங்க.
கௌரி : என்னது . பக்கத்து தெருவுல இருந்து வர இவ்ளோ நாழியா ?
தேவி திரும்பவும் மதனுக்கு போன் செய்தால்
தேவி: மதன்! அண்ணாவோட போன் சுவிட்ச் ஆஃப்னு வருது .
“மதன் கொஞ்சம் குழம்பினான்”
.
தேவி, இப்போ நீங்க அவரோட போன்ல தானே பேசறேள்.
தேவி :ஆமா மதன், இன்னைக்கு.என் போன எடுத்துண்டு போயிருக்கார் .எங்கபோனார்ன்னுதெரியலையேமதன், கொஞ்சம்பயமாஇருக்கு.
நீ கொஞ்ச போயி பாரேன்.என்னக்கு கொஞ்சம் பயமா இருக்கு. நா பாக்கறேன் தேவி, நீங்க பதட்ட படாம இருங்க. நா பாத்துட்டு உங்களுக்கு என்ன தகவல்ன்னு சொல்றேன்.
தேவி : சரிப்பா !
போனைவைத்தான்மதன்.
மதன்: கௌரி, நீ தேவியோட கொஞ்ச போய் இரு. பயப்படறா.
கௌரி : சரி! மதன்.
மதன்: உனக்கு அண்ணா போன் பண்ணினார்னா என்னக்கு தகவல் சொல்லு .
கௌரி : சரி மதன்.
மதன் வீட்டை விட்டு புறப்பட்டான்.
தேவி போனில் தெரிந்தவர்களுக்கெல்லாம் போன் செய்து ‘ அண்ணா அங்க வந்தாரா ?
ராஜி!அண்ணா அங்க இருக்காரா என்று கேட்டுக்கொண்டே இருந்தால்.
தேவிக்கு படபடப்பு வந்தது . இவர் எங்க போயிருப்பார் ? நா நெத்தி எப்பொம் போலதானே திட்டினேன் .
என்ன… ஒரே ஒரு உதை விட்டேன் கோபத்துல.
அதுக்கு((பிரசாந்தை) ! ஆனா அவ்ளோலாம். ரோஷம் கிடையாதே ? ஏதாவது விபரீத முடிவு எடுத்திருப்பாரா ?
தேவி, புலம்பிக்கொண்டிருந்தால்கூடத்தில்உட்கார்ந்து, கௌரிகேட்டுக்கொண்டேவந்தால்.
கௌரி : ச்சா ! வாயை மூடு தேவி, என்ன நீ இப்படியெல்லாம் பேசற .
தேவி: அது இல்லடீமா, அவர் எப்பவும் என்கிட்டே திட்டு வாங்கினாலும், காலைல காபி குடிச்சிட்டு,
காபிநல்லாஇருந்ததுன்னுசொல்லிட்டு, பொண்ணோடஒருஅஞ்சுநிமிஷம்பேசிட் ,என்கிட்ட சொல்லிட்டுதான் போவார்வெளில .
இன்னைக்கு !சொல்லாம போயிருக்கார், போன வேற மாத்தி என்னோடத எடுத்துண்டு போயிருக்கார் ,அதையும் ஆஃபன்னிருக்கார் .
அதான் கொஞ்சம் பயமா இருக்கு .
தேவியின் மகள் :இப்போ மட்டும் பயபடுமா .ஆனா அப்பா இருக்கறச்ச திட்டிண்டே இருந்த . அதான் உன் தொல்லை தாங்காம களம்பிட்டாரு.
கௌரி : பாரதி.அதெல்லாம் ஒன்னு இருக்காதும்மா. நீ அம்மாவை தீட்டாத, அவர் வந்துடுவார்.
பாரதி: அது இல்ல. அப்பா என்ன பண்ணாலும் திட்டுவா. தினமும் இவங்ககிட்ட இருந்து, அவருக்கு திட்டுதான் விழும்.
எதுபேசினாலும்திட்டு, அப்பாஒருஐடியா “ஜாலியா’ சொன்னாலும், அவரைஏதாவதுசொல்லவேண்டியது. “நீவாயமூடு, எதையாவதுஉலராதன்னு ” இப்போபாருங்க , சொல்லமையேபோய்ட்டார்.
கௌரி :வந்துடுவார் ! வந்துடுவார்.
கௌரி எழுந்து இருவரையும் சமாதான படுத்தினால். டீவியை போட்டாள்.சீரியலில்அழும்காட்சிவந்தது, “ஐயோ” ஐயோ” என , கௌரி’ சானலைமாற்றினால், நியூஸ் சேனல் செய்தி சொல்லிக்கொண்டிருந்தது ‘
“தலைப்பு செய்தி“
கிண்டி பாலத்தில் இருந்து ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணை செய்து கொண்டிருக்கிறார்கள் .
போலீஸ்காரர் பேட்டி குடுத்தார் :
அவருக்கு நாப்பத்துல இருந்து – நாப்பத்தியஞ்சுவயசிறிக்கும். மஞ்சள் சட்டை போட்டுண்டு இருந்திருக்கார். அப்பறம் வேஷ்டி .
கௌரி தேவியிடம், அண்ணா என்ன கலர் சட்ட போட்டிருந்தார் என்று கேட்டால் ?
ஏண்டிமா.
நா அவரை காலைல பாக்கவே இல்லனு சொல்றேனே.
என்னைக் எப்படி தெரியும்?
பாரதி :அப்பா, நேத்திக்கி மஞ்ச சட்டைதான் போட்டுண்டா.கமலா சித்தி வாஙகி கொடுத்தாலே அதுதான்.
கௌரி கொஞ்சம் பயந்தாள்.
தேவிக்கு படபடப்பு வந்தது ..அய்யொ! என்னடி இப்படி சொல்றா இவ.
எனக்குபயமா இருக்கே . அதெல்லாம் ஒன்னு இருக்காது தேவி, எதையாவது டிவியில சொல்லிண்டே இருப்பா. நீங்க வாங்கோ, வந்து பதட்டப்படாம உக்காருங்கோ. பாரதி ! அம்மாக்கு தண்ணி கொண்டா .டீவியைமியூட்செய்தால்.
*
சாலை ஓரமாய் , ஒருவன் மஞ்ச சட்டையும் , வெள்ளை வேஷ்டியும் அணிந்து, யோசித்துக்கொண்டே நடந்து போய்க்கொண்டிருந்தான். ரொம்ப பேசறா தேவி. அவளுக்கு கோபம் ரொம்ப வருது, வரவர. எதுக்காக இப்படி கோவப்படறான்னே தெரிய மாட்டேங்கிது. ஏதோ சரியில்லை ஆத்துல.
ஏதாவது ஹோமம், இல்ல பரிகாரம் பண்ணணுமான்னு கேக்கணும் அவர்கிட்ட..அவர்ஏதாவதுசொன்னார்னாநன்னாஇருக்கும்னு ‘பிரஷாந்த்” மனதில்நினைத்தான். அந்தஜோதிடர்சாலைக்குவந்தான்.என்ன இடமே மாறி போயிடுத்தே . நா முன்னாடி வரர்ச்ச ஒரே சந்தாபோகும். இது என்ன நாலு வழி போறது. கொஞ்சம் தூரம் நடந்தான்.. ஒரு பெட்டிக்கடை இருந்துதுசாலையோரமாக. அங்க கேப்போம் என்று போனான்.
“சார்! என்றான்
கடைக்காரர் : என்னப்பா ? இன்னா வேணும் உன்னக்கு ?
சார், இந்த “தேவனாம்ன்னு ஒரு ஜோசியம் பாக்கற இடம் இருக்குல்ல இங்க . அதுக்கு எப்படி போனும் ?
இன்னா பேர் சொன்ன ?
தேவனாம் சார்
இந்த கை ஜோசியம், மூஞ்சிய பாத்து நாம்ப யாருனு சொல்றானுங்களே ?அதுவா கேக்கற நீ ?
ஆமா சார், அதுதான் .
அங்க இன்னாத்துக்கு போற ? அங்க மூல சரியில்லாதவன்தான் போவான். உன்னக்கு என்ன ? என்று சொல்லிவிட்டு.
அங்க ஒரு புள்ளையார் கோவில் தெரியுதா ?
ஆமா சார்.
அங்குட்டு போயிட்டு, ரோட்ட கிராஸ் பண்ணு. பண்ணா , அங்க ஒரு போர்ட் வச்சிருக்காங்க. என்றார். அதுல போற்றுக்கும் தேவனாம்னு . அதுல பாரு. உன்னைக்கே தெரியும் என்றார் கடைக்காரர்
தேங்க்ஸ் சார்.
நடந்தான் .
மாணிக்கம் ,(ப்ரஷாந்த்தின்நண்பன், இவன் ‘தேவனாம்” சாலைக்குபோவதைபார்த்தான். “ஐயையோ’ பிரசாந்த்மாறிஇருக்கே)
இவனை பார்த்தான். மாணிக்கம் அவனை கூப்பிட்டான், ஆனால் வண்டியின் சப்த்தத்திலும் சிக்னல் விழிந்ததாலும், இவனால் பேச முடியவில்லை.
மாணிக்கம்எப்பவும்போன்செய்வதுபோல், மதனுக்குபோன்செய்தான். மதன் – போனைஎடுத்தவுடன்,’ டேய். வேலையாஇருக்கேன். என்னசொல்லு.
மச்சான்- என்ன ‘நம்பதலைவர் ‘ தேவனாம்’ போறார்என்றான்மாணிக்கம் .
யாருடாஎன்றான் ‘மதன்”
“பிரஷாந்த்’ டா.
மதன் “அதிர்ச்சியாக’ “என்னதேவனாமா”என்றான்.
அவன் நடந்து, தேவானம் என்ற போர்டை பார்த்தான். அட பாவீங்களா ! இதை ஒரு சாலையாவே மாத்தீட்டானுங்களா என்று ஆச்சிரியதுடன் நடந்தான் . அந்த சாலையில், தேவனாம் பற்றிய ஒரு சில செய்திகள், சாலையில் ஒட்டப்பட்டிருந்தது.
“தேவனாம் ” “வாழலாம்” என்று ஒரு படத்தில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது.
அவன் சாலையை பார்த்துக்கொண்டே நடந்து சென்றான்.
“நல்ல வாசனை வருதே” என்னவென்று சுற்றி பார்த்தான். அங்கங்கே ஊது பத்தி ஏற்ற பட்டு , மக்கள் அதன் முன்பு நின்று பூஜை செய்து கொண்டிருந்தார்கள் .
அதற்கென்று ஒரு மடம் போல் கட்ட பட்டிருந்தது.
என்ன இந்த மனுஷன்.இப்படி இடத்தை வளச்சு போட்ருக்கான் என்று சொல்லிக்கொண்டு சாலையை கடந்தான்.
‘தேவனாம்” ன்பதுஎன்ன ?
“தேவா” என்றஒருவன் , சிறுவயதில் , படிப்புவராதகாரணத்தினால் , அவனின்அப்பா , அவனை “அவரின்’ சொந்தஊருக்குஅனுப்பினார். அங்கேஅவன் , அவனுடையதாத்தா “தேவருடன்” வளரும்சூழல்ஏற்பட்டது. அவர்ஒரு ‘ஜோஸ்யக்காரர். பெரிதாக , காசுஏதும்வாங்காமல் , மக்களின்நலனுக்காக , உண்மையானவிஷயங்களை , பரிகாரத்தைமட்டுமேசொல்லிகொண்டிருந்தார். தேவாவுக்குஇருபதுவயதுவரைக்கும், இதில்பெரிதாக ‘ஆசையோ’என்னமோஇல்லை. ஆனால், தாத்தாவிடம்கூட்டம்அலைமோதிக்கொண்டேஇருந்தது. அவனுக்கு ‘ஜோதிடம்மேல்ஆசைவளர்ந்தது, தாத்தாவிடம்கற்றுக்கொண்டான்எல்லாவற்றையும். தாத்தாவின்காலம்முடிந்தபிறகு, மக்கள் “அடுத்தவாரிசாகபார்த்தது,’ தேவாவைதான்’. ‘அவன்’ என்றசொல் ‘அவராக’ மாறியது. மக்கள் , அவனைமதித்தார்கள், அவன்அவனுக்குகீழேசீடர்களைஉருவாக்கினான். மக்களுக்குகாலமாற்றத்தில், பிரச்சனைகள்ஏறிக்கொண்டேபோனது, ‘தேவனாம்” தான்இதற்க்குசரியானஇடம்என்றுமக்கள்நம்பிஏற்றுக்கொண்டார்கள். ‘தேவா’ “தேவனாம்’ என்றஒன்றைஉருவாக்கினார் . அவர்ஒரு “காலமாற்றத்தின்ராட்சசர் ‘ . காலத்துக்குஏற்றவாறுஅவரின்ஜோசியத்தைமாற்றிக்கொண்டேஇருப்பார். தற்போதைக்குமக்கள்கூட்டம் “கல்யாணமும், மனைவியும், கணவனும்தான்சமூகத்தில்பெரியபிரச்சனையாககருதபடுகிறதுஎன்றுகணித்தார். அதைநோக்கிபயணித்தார்.
*
கௌரி :ராஜி கிட்ட கேடீங்களா தேவி .
தேவி : என்ன கேட்டேன் ?
கௌரி : அண்ணா அங்க வந்தாரான்னு கேட்டீங்களா ?
தேவி: ஆமா ! என்ன ஆச்சு?
கௌரி :எதுக்கு கேட்டீங்க ? முதல்ல எதுக்கு அவகிட்ட இதை சொல்லணும் ? இப்போ பாருங்க ! அவால்லாம் வரா. வந்தா வாய மூடிண்டு இருக்க மாட்டா.
மா! தேவி. தேவி! என்று கூப்பிட்டு கொண்டே , ப்ரஷாந்த்தின் மாமாவும் மாமியும் வந்தார்கள்.
இதோ வண்ட்டா உங்கள கேள்வி கேட்டே படுத்துவா .
இருவரும் கூடத்திற்கு வந்தார்கள்,
கௌரி : வாங்க மாமா !
தேவி மௌனமாய் வந்து நின்றாள்.
என்னமா உனக்கு பிரச்சனை ? பொண்ணுங்கதா அம்மாவீட்டுக்கு கோச்சுண்டு போவா. இங்க பாரு , உன்னால அவன் வீட்ட விட்டு போய்ட்டான் .
கிருஷ்ணா சித்தப்பா ! வெளியே இருந்து வரும்போதே . பேஷ்! பேஷ்! நன்னா இருக்கு தேவி. ரொம்ப நன்னா இருக்கு. எப்போ பாத்தாலும் அவரை திட்டிண்டே இருக்காதான்னு எத்தனை வாட்டி சொன்னேன், கொஞ்சகூட கேக்கலையே நீ . இப்போ பாரு பாவம் அந்த மனுஷன் , எங்க போனாரோ. என்ன பண்றாரோ
குடும்பத்தார் எல்லோரும் அண்ணன் காணவில்லை என்பதும் டிவி செய்தியும் தான் அன்றிய உரையாடல். (டீவிசெய்தியைதேவிபேச்சுவாக்கில்ராஜியிடம்சொல்லிருக்கிறாள். ராஜி, எல்லோருக்கும்அதைசொல்லிவிட்டால்)
கொஞ்சம் வம்பு பேச்சு ,தேவியின் படுத்தல் மற்றும் தேவிக்கு இனாமாக கொஞ்சம் திட்டும்விழுந்தது.கௌரி தேவியின் இடது புறத்தில் மற்றும் நிற்கவில்லை, இடது புறத்தில் அவளுக்கு பக்க பலமாக நின்றாள். எல்லோரும் தேவியை குத்தம் சொன்னார்கள், திட்டினார்கள், ஒரு சிலர் அண்ணாவின் உயிருக்கு ஏதாவது நடந்தால் , தேவி உன்னைக் சிறைவாசம் தான் என்று மிரட்டினார்கள். கௌரி மட்டும் தேவிக்கு ” அக்கா, என்று முதல் தடவை அழைத்தால். நீங்க தைரியமா இருங்க, இவா என்ன வேணாலும் சொல்லிட்டு போட்டும் . அதையெல்லாம் காது குடுத்து கேக்காதீங்கோ .இவாளுக்கு என்ன தெரியும். அவரை நீங்க திட்டினாலும் , உதைச்சாலும் .அவர் தான் உங்க உலகம்னு.
எங்களுக்குத்தான் தெரியும் அவர்னா உங்களுக்கு எவ்வளவு இஷ்டம்ன்னு .நீங்க இதுங்க சொல்றதல்லாம் மண்டைலயே ஏத்திக்காதீங்க .
கௌரி தேவி கையை பிடித்து தைரிய படுத்தினால்.
தேவி கொஞ்சம் ஈகோ பிடித்த பெண், தனக்கு இவளவு பிரச்சனை இருந்தும், கௌரி அவளுக்கு பக்கபலமாய் இருந்தும் , தேவி ‘கொஞ்சம்மதனுக்கு கொஞ்ச போன் போட்டு பாக்கறியா என்று சொல்ல கூச்ச பட்டாள்’, அவளின் ஈகோ ‘கேட்காதே கேட்காதே’ என்று தடுத்தது. எங்க நா கேட்டுடா, என்னய அவ பயந்துட்டான்னு நினச்சுடுவாளோ என்று அவளின் ஈகோ சொன்னது
ஆனால் , கௌரிக்கு தேவியை பற்றி தெரியும்.கௌரியே மதனுக்கு போன் செய்தால்.
மதன் போனை எடுத்தான் – என்ன மதன் “எனி நியூஸ் ” ? என்றால் கௌரி.
இப்போதான் தெரிஞ்சிது கௌரி.மாணிக்கம்போன்பண்ணான்.
ஆனா தேவிகிட்ட சொல்லாத.
தேவி பக்கத்துல இருந்தா, நீ கொஞ்சம் தள்ளி போயி பேசு. சொன்னா பயப்படுவாங்க. அவர் “தேவனாம்” ஜோசியத்த்துக்கு போயிருக்கார்.
கௌரி அதிர்ந்தாள் .என்ன சொல்ற மதன் ? அங்க போனா.. திரும்பி வரவன் சாமியாராவோ இல்ல அந்த ஜோசியர் என்ன சொல்றாரோ அத அப்படியே கேட்ருவாங்களே.
அவன் ஏதோ ஹிப்னாடிசம் பண்ணுவான்னு சொல்லுவாளே . ஏன் ! நம்ப விச்சு மாமாவோட அண்ணா புள்ளயே இப்போ காசி ,ராமேஸ்வரம்னு அலையறானே குடும்பத்தைவிட்டுட்டு. பாவம்அந்தகாயத்ரி, இப்போகூடசொல்லிஅழறா “அந்தஆளுதான், ஏதோஹிப்னாடிசம்” பண்ணிமயக்கிட்டான்னு. நல்ல கம்பெனில வேல பாத்துண்டு இருந்தான் . கடவுளே!
அவர்கிட்ட போய் எனக்கு காசே இல்ல, சம்பாத்தியம் பத்தலைன்னு சொன்னான் பாவம். அதோட அவன் அந்த வேலையும் விட்டான். காயத்ரியையும் விட்டுட்டான் . காயத்த்ரி தெனமும் பொலம்பறா .அவர் என்னவோ பண்றார் அக்கா , எதையும் கேக்கவே மாட்டேங்கிறார்.குடும்பத்தை பத்தின அக்கறையே இல்லாம போயிடுத்து அக்கா, ‘தேவா’ நாம ! தேவா நாம ! ன்னு அதையே சொல்லிண்டே இருக்கார். கலி முத்திதான் போயிருக்கு.
இவர் எதுக்கு இப்போ அங்க போயிருக்கார் ? என்னக்கு பயமா இருக்கு மதன்.
இவர போய் பாத்துட்டு பொண்டாட்டி படுத்தார்ன்னு சொன்னாலே , பிரிச்சிடுவார் . இந்த தேவி என்னணா, அவரை நெத்தி அடிக்கவேற செஞ்சுருக்கா . அவர் என்ன முடிவு எடுக்கபோறாரோ என்று புலம்பினாள் கௌரி.
மதன் ஒரு நிமிடம் கௌரி சொன்னதை கேட்டுக்கொண்டே எதுவும் பேசாமல் இருந்தான்.
டேய் மதன், இருக்கியா ? டேய் , உன்னைத்தான் … அவன் எதுவும் பேசாமல் இருந்தான் .
டேய் என்றால் .
இருக்கேன் கௌரி. என்று சொல்லி என்னசொல்றதுன்னேதெரியலஎன்னைக்.நீ பயப்படாத கௌரி . தேவிகிட்ட சொல்லாத , நா போய் அவரை அழைச்சிண்டு வரேன்.
கௌரி : சரி மதன் , கொஞ்ச பாத்து அழைச்சிண்டு வந்துடா என்று கொஞ்ச பாசமாய் குழைந்தாள்.
மதன்: கண்டிப்பா கௌரி என்று சொல்லி போனை வைத்தான். அண்ணன்ல அதான் மேடம் பணிவா பேசறாங்க என்றான் மதன். இதுவே நா ஏதாவது சொல்லி, அவர் போயிருந்தார்னா. என்னய வாழைப்பழத்தோல் மாறி உரிச்சு தூக்கிபோட்ருப்பா.
பிரசாந்த் சுற்றிபார்த்துக்கொண்டே தேவனாம் சந்நிதிக்குவந்தடைந்தான் . இடம் நன்கு சுத்தம் செய்திருந்தது. அரை பெரிதாய் இருந்துது. அறையின் செவுறுகளில் தேவனாம் பற்றின விவரம், ஜோதிடர்களின் மகிமையும், ஜோதிடர்களால் பல சாதா மனிதர்கள், மஹான் ஆனா கதையும் பதித்திருந்தது.
பிரசாந்த் அறையின் அமைதியை விரும்பினான். எல்லோரும் ஒரு பைஜாமா போட்டுக்கொண்டிருந்தார்கள். அறையின் ஒரு பக்கத்த்தில் ஜோதிடர்கள் பக்தர்களுக்கு பூஜை செய்து வைத்துக்கொண்டிருந்தார்கள். இவன் ஒவ்வரு படங்களை பார்த்தான்.
“எங்கள் கண் முன் வாழும் ஒரு தெய்வம்” என்று ஒரு படம் இருந்து, அதில் ஒரு ஜோதிடரின் காலில் ஒருவன் விழுந்து கும்பிடும் காட்சி இருந்துது.
“ஒருவனின் கதை”
“கன்னியாகுமரியில் இருந்து”
என் பெயர் நீலகண்டன். சென்னையில் கிண்டி ரயில் நிலையத்தில் பானிபூரி விற்றுக்கொண்டு இருந்தேன் . பெரியதாய் லாபம்சம்பாதிக்க தெரியவில்லை என்னக்கு. அதனால், பானிபூரியுடன் இட்லி,தோசையும் விற்பனை செய்ய துடங்கினேன் . நன்றாக விற்பனை ஆனது. மாச வருமானமும் நன்றாக வந்தது. ஒரு நாள், திடீரென , இரண்டாயிரத்தி இருபதாம் ஆண்டு , கொரோனா என்ற ஒரு வைரஸ் வந்ததால், அரசாங்கம் ஊரடங்கு அறிவித்தது. வாழ்க்கை இருட்டானது, வருமானம் நின்று போனது. என் கல்யாண வாழ்க்கை தண்ணீரில் எழுதியபத்திரிகைஆனது. வீட்டுக்குள் அடைந்து கிடந்தேன் . எல்லாம் முடிந்து போனது, இனிமே நா பிச்சை எடுக்கணும் என்று அழுதேன் சாமி முன்னாடி . என் வீட்டு வாசலில் பேப்பர் தாள்கள் விழுந்து கிடந்தது (உண்மையாகசொன்னால், அதுகுப்பைதாள்கள்), அதை போய்பார்த்தேன். ஒன்றை எடுத்தேன். “வாழ்க்கையில் கஷ்டத்தை பார்த்தீர்களா ? வாழ்க்கையில் கஷ்டம் மட்டும் உங்களை அழைக்கிறதா ? கஷ்டமும் துக்கமும் ஒரே நேரத்தில் உங்களுடன் விளையாடுகிறதா ?எங்களிடம் வாருங்கள், நாங்கள் உதவுகிறோம். எவன் எந்தன் வீட்டு முன்னாடி அந்த தாளை போட்டானோ, அவன்தான் என்னுடைய அன்றிய ஹீரோவாக இருந்தான் .அதை பார்த்து, தேவநாமுக்கு வந்தேன். குருஜி என்னை மாற்றினார், நம்பிக்கை தந்தார். வேலை செய்ய கற்றுகொடுத்தார். நான் இன்று “இந்த ஊரில் ஒரு ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறேன்” என்று எழுத பட்டிருந்தது. எனக்குகல்யாணம்நடந்தது, பிறவுகஷ்டம்வந்தது ,குருஜியைபார்த்தேன்நானும்அவளும்பிரிந்துவாழ்வதுநல்லதுஎன்றார். என் மனைவியும் நானும் பிரிந்து அவள் வாழ்க்கையை அவளும், என் வாழ்க்கையை நானும் வாழ்கிறோம் எங்கள் குருஜியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு
என்று எழுதி இருந்ததை பார்த்து சிரித்தான்.
அட! அறிவாளிங்களா . இப்படி இருந்தா என்ன பண்றது என்று தலையில் அடித்தது கொண்டான். ஒரு ஸ்வாமிஜி இவன் முன்னாடி வந்து “உங்களுக்கு என்ன பிரச்சனை ” ? என்றார் . “மனைவிதான்” என்று பெரும்மூச்சு விட்டு
சொன்னான் சற்றுசிரித்துக்கொண்டே…
. என்னுடன் வாருங்கள் என்று அழைத்து சென்றார். முதல் மாடிக்கு பிரசாந்தை அழைத்து சென்றார். அங்கே சென்று பார்த்தால்,” வரிசையாக ஏழு -எட்டு பேர் வரிசையில் உட்கார்ந்திருக்கிறார்கள். இவன் ஒருகணம் கண்ணை உருட்டி “என்னடா இது” எத்தனை பேர் இங்க , எதுக்கு இவளவு பேர் இங்க இருக்காங்க.
அங்க உக்காருங்க. இதை வச்சிக்கோங்க என்று ஒரு ‘மஞ்ச அட்டையில் ‘பத்து’ என்று எழுத பட்டிருந்தது. அவன் அதை பார்த்து முழித்தான்.
என்ன சொன்னான் மதன் ? பாத்தானா ?
இல்ல தேவி, தேடிண்டுதான் இருக்கானாம் . போன் பண்றேன்னு சொன்னான்.
அயோ! ஏன் இவர் இப்படி பண்ணிட்டாரு ? என் மேல கோபம் இருந்தா, என்கிட்டயே சொல்லிற்காலமே . நா சண்டபோட்டா பேசாமயா இருக்கபோறேன். நானும் ரெண்டு பேச்சு பேசினா , அவரும் திட்டினா சரியாப்போச்சு..பத்து நிமிஷம் கத்துவேன், அப்பறம் இந்தாப்பா கேசரி, காப்பின்னு நான்தானே குடுப்பேன். பாரதி என்னமோ, என்னக்கு அவர் மேல பாசம் இல்லாத மாறி , உண்ணலா தான் அப்பா வீட்டைவிட்டு போய்ட்டார்ன்னு சொல்றாளே .அவரே எத்தனையோ வாட்டி சொல்லியிருக்கார் . நீ திட்டாட்டி அன்னிக்கி நாள் நாளாவே இலேன்னு.
விடுங்க ! நானு அதான் சொல்றேன், என்னதான் நீங்க அவரை திறனாலும், சண்டைபோட்டாலும், எங்களுக்குத்தான் தெரியும், அவர் மேல உங்களுக்கு எவ்வளவு பாசம்னு . வந்துடுவார் , நீங்க வேணா பாருங்கோ.
பிரசாந்த் கொஞ்ச நேரம் பொறுமையாய் உட்கார்ந்திருந்தான் . பக்கத்தில்பேச்சு குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தது.
‘அவகிட்ட எவ்வளவு சொன்னாலும் கேக்க மாட்டேங்கிறா. எப்போ பார்த்தாலும் கத்திண்டே இருக்கு .
அட நீ வேற ! அவ என்கிட்ட பேசவே மாட்டேங்கிறா .அப்பறம் எங்கத்த “அண்டர் ஸ்டான்ட் ” பண்றது.
அவ சொல்றததான் நா கேக்கணுமாம் , நா சொல்றது எல்லாம் தப்பு. என்னன்னவோ சொல்றா. அவகிட்ட இருந்து கொஞ்ச நாள் தள்ளியே இருக்கும்னு ஜோசியர் சொன்னார் ஒரு ஆறு மாசம் முன்னாடி, இப்போ நான் அப்படிதான் இருக்கேன், அவளோட இல்லாம , தனியா இருக்கேன், நிம்மதியா இருக்கேன், அதான் அய்யாவ பாத்துட்டு “நன்றி”சொல்லிட்டு தக்ஷனை குடுத்துட்டு போலாம்னு வந்துருக்கேன்.
பிரசாந்த் சட்டென்ன்று அவர்களை பார்த்தான்.
” என்ன இப்படி இருக்கு இந்த இடம் . நம்ப தப்பான இடத்துக்கு வண்டோம்மோ ? “
நா சும்மா ஜாதகம் எப்படி இருக்குனு கேக்கலாம்னு வந்தா . இவனுங்க வேற வேலைல பாக்குறாங்க. பேசாம போய்டலாம் என்று எழுந்தான். பிரஷாந்த்‘ ! பிரசாந்த்! என்று கூப்பிட்டார்கள். மாட்டிண்டேனே என்று திரும்பினான் .சுவாமிஜி உங்கள அழைக்கிறார். வாருங்கள். இதோ வரேன் என்று இஷ்டமில்லாமல் சொல்லி உள்ளே சென்றான்.
*
ஒரு பெரிய அரை . அதில் குருஜி மட்டும் ஒரு பலகாவில் உட்கார்ந்திருந்தார். சுற்றி படங்கள், ஊதுவத்தி. ஒரு இனிமையான
மனதை தூண்டும் பாடல் ஜபித்துஒண்டே இருந்துது . குருஜி கண்ணைமூடி, ஜபித்து கொண்டிருந்தார்.
இவன் அவர் முன்னாடி உட்கார்ந்தான். இடத்தை சுற்றி பார்த்தான்
அவர் கண்ணை திறந்தார். அவர் அவனை பார்த்து “வணங்கி ” சொல்லுங்க ‘உங்களுக்கு என்ன தீர்வு வேணும் ” . அவன் என்ன சொல்வது என்று தெரியாமல், அவன் கொண்டு வந்த ஜாதகத்தை எடுத்து, எல்லாருக்கும் எப்படி இருக்குனு சொல்லுங்க என்றான் ”
எங்கிட்ட உங்க பெயருக்கு பிரச்சனை “மனைவின்னு” குடுத்திருக்காங்க. அப்படியா ! மன்னிக்கணும், தப்பா சொல்லிருப்பேன். “மனைவியோட ஜாதகம் எப்படி இருக்குனு கேக்கணும்னு தான் வந்தேன்.
நல்லது!என்றார் . கொஞ்சம் நேரம் அதை பார்த்தார். விரல்களால் எண்ணினார் . இவருக்கு எல்லாமே நல்லதே நடக்கும்னு வேண்டினார் “
“உங்க பேர் “பிரஷாந்த் முத்து” வயசு நாற்பத்தி நாலு. உங்க மனைவி பேர் “தேவி! வயசு முப்பத்தி எட்டு . உங்க பொண்ணோட பேர் , பாரதி வயசு இருபத்தி ரெண்டு .
உங்க மனைவியோட எப்பவும் உங்களுக்கு மனஸ்தாபம் ஏற்படுது. அவங்க உங்கள புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க . எப்பவும் சண்டை , கை ஓங்குறாங்க, வீட்டுக்கு வந்தாலே சண்டை, கத்தல். வீம்பு,
பிடிவாதம் எல்லாமே அவங்ககிட்ட போதுமான அளவுக்கு இருக்கு. அதனால உங்க நிம்மதியை இழைக்கறீங்க . சரியா என்றார் ?
பிரசாந்த் ! ஆமா என்றான்.
ப்ரஷாந்த்துக்கு கொஞ்சம் ஆச்சிரிமாய் இருந்துது. என்ன இந்த மனுஷன், இப்படி சொல்றார் எல்லாத்தயும் . கரெக்ட்டா வேற சொல்றார். எப்படி என்று யோசித்தான் .
“நீங்க உங்க குடும்பத்தோட கொஞ்ச நாள் பிரிஞ்சு தனியா இருங்க பிரஷாந்த் , அப்போதான் உங்க கஷ்டம் தீரும் ,உங்க மனைவியும் நீங்களும் அப்போதான் ஒரு புனிதலுக்கு வருவீங்க ” உங்க நேரம் அப்படி இருக்கு . நா காசுக்காக பாக்கர ஜோசியர் இல்ல, மனுஷங்க கஷ்டமே பட கூடாதுனு நினைக்கிற ஆளு நான் .நம்பி இருங்க , நிச்சயம் மாறும் உங்க வாழ்க்கை.மனைவி கத்தினா அவங்களோட சண்டை போடாதீங்க . அவங்கள புரிஞ்சிக்க வைங்க. அப்போதான் அவங்களுக்கு உங்க அருமை தெரியும் என்று அறிவுறுத்தினார் அந்த ஜோதிடர்.
நீங்கதான் அவங்க உலகம்னு அவங்க இருக்கணும் . அய்யொ இவரை போய் இப்படி சொல்லிட்டோமேன்னு அவங்களே முன்னாடி வந்து மன்னிப்பு கேக்கணும். அப்போதான் உங்களுக்கு நிம்மதி ஏற்படும்.
அவர் கண் பிரஷாந்த் மேலேயே இருந்துது . ஏதோ ஒரு ஹிப்னாடிசம் செய்ய முயற்சிப்பதுபோல் இருக்கிறது.ஒருஈசட்டென்று, அவனுக்குமுகத்தின்முன்பறக்க அவன் விழித்துக்கொண்டான். .பிரஷாந்த் ஒரு கணம் நினைவுக்கு வந்தான் .
அவரை கை கூப்பி, நா வரேன் அய்யா என்று வணங்கி அங்கே இருந்து புறப்பட்டான்.
வெளியே வந்தான். அடுத்து இருக்கும் மக்களை பார்த்தான் . தலையைஅசைத்து “இது சரியில்லை என்று சொல்லி புறப்பட்டான்
வரும் வழியெல்லாம் அவர் சொன்னதையே யோசித்து வந்தான் .
‘அவங்களுக்கு உங்கள புரிஞ்சிக்கனும்னா கொஞ்சம் நாள் நீங்களும் அவங்களும் தனியா இருகணும் . இல்ல இது இப்படியே தான் இருக்கும் . அதனால கொஞ்ச நாள் அமைதியா சந்தோஷமா இருங்க .
அவர் சொன்னதை யோசித்தான் . கொஞ்ச நாள் பிரிஞ்சு இருக்கலாமா ? அமைதியாய் இருக்கலாமா என்று யோச்சித்தான் . நிஜமாவே அந்த ஆள் சொன்னது நல்லது தானா ? தேவி என்னதான் திட்டினாலும், அடிச்சாலும், அவளுக்கு நா தான் உலகம். நாங்க ரெண்டு பேருமே அப்படிதான் இருக்கோம். அவர் சொல்ற மாறி பிரிஞ்சு இருந்தா ,என்னக்கு தான் பைத்தியம் புடிக்கும் அவகிட்ட திட்டு வாங்காம .ஏதோ அவர் நல்லது சொல்லுவார்னு போனா , என்னத்தையோ சொல்றார் .
சரி நம்ப ஏன் மண்டைய ஒடச்சுக்கணும், ஒரு வார்த்தை தெவிட்டயே இதையும் சொல்லி, அவளிடம் ஒப்பீனியன் என்னனு கேட்ருவோம், அவ ரெண்டு திட்டு திட்டினா எல்லாம் சரியாயிடும்என்றுசிரித்துக்கொண்டேசொல்லி அவன் வீட்டுக்கே வந்துஅடைதான்.
வீட்டுவாசலில் வாகனங்கள் கொஞ்சம் அதிகமாய் இருந்துது. என்ன நம்ப வீட்டுல வண்டியா நிக்குது. அங்கே இருக்கும் மக்கள் எல்லாம் ப்ரஷாந்த்தை பார்த்ததும் முணுமுணுத்தார்கள். ஒருவன் இவன் முன்னாடி வந்து’ எங்கய்யா போனா ? உன்ன நாங்க காலைல இருந்து தேடிட்டிருக்கோம், நீ என்னனா பொறுமையா நடந்து வர. போயா ! போ , அக்கா பயந்திடிச்.
சேகர் மாமா ! அவன் வருவதை பார்த்தவுடன்.
டேய்! படுவா! எங்கட போனா ? சொல்லிட்டு போக மாட்டியா ? உன்னக்கு என்னவோ எதுன்னு பயந்துபோய்ட்டோம் எல்லாரும். எங்க போனா நீ ?
மாமா. ஒருவாரமா நா வாக்கிங் போலயேன்னு கொஞ்ச லோங் வாக் போனேன்.
போடா லூசே பயலே. வாக்கிங்பொன்னானவாக்கிங் . இருதேவிகிட்டஇருக்குஉன்னக்குஎன்றார்.
தேவியும் கௌரியும் அறைக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
பயப்படாதீங்க தேவி. அண்ணா வந்துடுவார்.
தேவி மௌனமாய் இருந்தாள்.
எனக்கு இந்த அடி தேவைதான் கௌரி. எப்போமே நா அவர கஹ்த்துவேன், திட்டுவேன். கத்துவேன் , சண்டைபோட்டுண்டேஇருப்பேன். ஏன் ?என்னோடபுருஷன்கௌரிஅவர், என்னோடமுதல்காதல்அவர்தான். என்னக்குஎல்லாஉரிமையும்இருக்குன்னுஅவர்தான்என்கிட்டகல்யாணம்ஆனாமுதல்நாள்சொன்னார். என்னக்குஅவர்கிட்டசண்டைபோடாம , திட்டமாஇருந்தா , ஏதோரெண்டுபெரும் ‘யார்யாரோ’மாறிஇருக்கோம்னுதோணும். ஆனா , இப்போ அவர காணும்னு தெரிஞ்சப்பறம், என்னக்கு நா பண்ணினது தப்புன்னு தோணுது.
“பேசித்தீர்க்க முடியாத பிரச்னையின் விளைவுதான் , என்னக்கு இப்பொழுது நடந்த ஒரு சூழல்”
எங்களோடகாதல்பாஷைஅதுதான். “அன்பாபேசமாட்டோம், மனசுலஇருக்கறதகொட்டிடுவோம், கட்டிண்டுஅழமாட்டோம், ஆனாரெண்டுபெரும்விட்டுகொடுக்கமாட்டோம். என்னதான்சண்டைபோட்டாலும், அடுத்தநாள், “தேவி- காபி -பிரமாதம்’ன்ற ‘பாராட்டோட’தான்ஆரமிப்போம். இதுஎங்ககாதல்கௌரிஎன்றால். அவர்எண்ணெயைவிட்டுட்டுபோகமாட்டார். வருவார்பாரு.
எங்ககாதல் , இப்படிமுடியாது. “கௌரி” ஆச்சிரியமாக “தேவி’யாஇப்படிபேசறதுஎன்றுநினைத்தால். “மதனைபற்றிநினைத்தால், “நானும்மதனும்கூடஅப்படித்தான். அடிக்கடி சண்டைபோடுவோம், அவன் ஆனா என்னய திட்ட மாட்டான் , பாவம் இன்னிக்கி கூட காலைல திட்டிட்டேன் அவனுக்கு புடிச்ச அல்வா பண்ணி தரணும் என்று ‘மனதில்’ சந்தோஷமாக நினைத்தால் ..
*
அம்மா ! தேவி, கௌரி ரெண்டு பெரும் இங்க வாங்க. என்று சேகர் மாமா அழைத்தார்.
தேவி தேவி என்று எல்லோரும் கூப்பிட்டார்கள். தேவிக்கு கொஞ்சம் பதற்றம் வந்தது. பொறுமையாய் அறைக்கு வெளியே சென்றால்.
கூடத்தில் ‘பிரஷாந்த்” நின்று கொண்டிருந்தான்
ஹாய் என்று பிரஷாந்த் சொன்னான் . தேவி பெரும்மூச்சு விட்டாள்.கண்ணில்இருந்துஒருசொட்டுகண்ணீர்சிரிப்புடன்கண்களில்இருந்துவந்தது .
பிரஷாந்த் ‘தேவியின்’ கண்ணீரைபார்த்து, புரிந்துகொண்டு,’ ஹேய்! என்னஆச்சு , கன்னத்துலவேர்த்திருக்குபாருஎன்றான் “எல்லோரும் “வேர்க்கும்வேர்க்கும்டாஉன்னைக்என்றார்கள்.
சிலர்சிரித்தார்கள் . யப்பாவந்தியேநீஎன்றார்கள்.
டேய்! எங்கடா போனா என்று கௌரி கத்தினாள்.
கொஞ்ச லோங் வாக் போயிட்டு வந்தேன் என்று சிரித்துக்கொண்டே சொன்னான்.
தேவி அவனை பார்த்து எதுவும் சொல்லாமல், எதுவும் கேட்காமல். காபி காலைல குடிக்காமலே போய்ட்டேள் , கலந்து தரேன் உள்ளே சென்றால்.
கௌரி வெளியவும் உள்ளேயும் பார்த்து கொண்டிருந்தாள்.
யார கௌரி பாத்துண்டிருக்க என்று பிரஷாந்த் கேட்டான் .
அண்ணா ! மதன். உன்ன கூட்டிண்டு வரத்தானே அங்க வந்தான்
அவன் எங்க போயிருக்கான் என்றான் பிரஷாந்த் ?
கௌரி அதிர்ந்தாள்.
அண்ணா என்று இழுத்தாள்.
கௌரி சொல்லுமா..
யார் எங்க போயிருக்கா என்று தேவி கேட்டுக்கொண்டே வந்தால்.
மதன் அந்த இடத்துக்கு வந்தான். .அவன் அவரை இங்கதான் பாத்தேன்னு சொன்னான். சரி என்று தேவனாம் சாலைக்குள் நுழைந்தான் .மதன் அந்த இடத்தை பார்த்து மெய்மறந்து போனான். உள்ளே இருந்த அறையை பார்த்து ஆச்சிரிய பட்டான். அங்கே எல்லோரும் உட்கார்ந்து பூஜை செய்துகொண்டிருந்தார்கள். .அந்த இடத்தின் நிறம், அங்கே இருக்கும் சேவகர்கள், அவர்களின் உடை, ஊதுபத்தி வாசனை, அவனுக்கு இதமாய் இருந்துது. அமைதியை தந்தது, இவனுக்கு ஒருவித விடுதலை கிடைத்தது போல் உணர்ந்தான் . அவனுக்கு கௌரியின் வார்த்தைகள், திட்டுகள், இவனிடம் சண்டைபோட்ட காட்சிகள் எல்லாம் நினைவுக்கு வந்தது. அதயெல்லாம் யோசித்து , இங்கே இருக்கும் புனிதமான அமைதியையும், சாந்தமான மனிதர்களின் பார்வையையும் அவன் ரசித்தான். உறைந்துபோய் நின்றான் .
மைக்கில் ஒருவன் செய்தி வாசித்தான் .
“வாருங்கள் வாருங்கள் ! மனைவியிடம் பிரச்சனையா ?இங்கே வாருங்கள்.
நிம்மதி வேண்டுமா ? இங்கே தருகிறோம் . அமைதியை உங்களிடம் அனுப்புகிறோம் .
வாருங்கள் அய்யாவே! என்று அந்த மைக்கில் சொல்ல , மதன் அவனையே மறந்து அந்த ஜோதிடர் இருக்கும் இடத்திற்கு சென்றான். சேவகர்கள் அவனுக்கு ஒரு மஞ்ச அட்டையை குடுத்து, கொஞ்ச நேரம் காத்திரிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என்றார் .அவன் உட்கார்ந்தான். அந்த அட்டையில் ‘இரண்டு’ என்று போட்டிருந்தது .
“ப்ரஷாந்துக்கு கௌரி எல்லாவற்றயும்சொன்னால்..ப்ரஷாந்துக்கு அதிர்ச்சியாய் இருந்துது. தேவி திகைத்து நின்றாள். கௌரி சொன்னதை கேட்டு.
‘மதன்! மதன்! என்று அழைப்பு வந்தது.
மதன் உள்ளே சென்றான்.
வாங்க மதன் ! மனைவி கடுகா வெடிக்கறாளா என்றார் ஜோதிடர்
‘ஆமா அய்யா’ என்றான் மதன் .
மதனைபற்றி . மனைவிகௌரியைபற்றி, அவர்களின்காதல்கதையைபற்றிசொன்னார்ஜோசியர் . அந்த “ஈ” இப்பொழுதுமதனைநினைவுக்குகொண்டுவரஉதவவில்லை.
மதன் “ஜோசியர்என்னசொல்கிறாரோ , அதையேசெய்யதுடங்கினான்
“எழுந்துநில் – நின்றான்‘
இடதுபுறம்செல் – சென்றான்
பைஜாமாஅணிந்துகொள்கிறாயா – கொள்கிறேன்என்றான்.
உட்காருஎன்றார்- உட்கார்ந்தான்.
(தேவி கௌரியின் கையை பிடித்து நின்றாள்)





Comments