top of page

Readers Write In #778: இப்படியும் ஒரு கதை

  • Writer: Trinity Auditorium
    Trinity Auditorium
  • Feb 22
  • 14 min read

By Soorya N

                                                    முதல் கதை

“எல்லோருக்கும் வணக்கம்”

“உங்களது அன்றாட வாழ்வில் ,உங்கள் வேலைகளுக்கு நடுவில், பல மண்டை குடைச்சலுக்கு இடையில்,பல பாடல்களை கேட்கும் ஆசையில் , கதைகள்  படிக்கும் ஆர்வத்தில்,யார் ஜெயிக்கிறார்கள் , யார் தோற்றார்கள்  என்று அனாலிசிஸ் செய்யும் வேகத்தில் ஓடிக்கொண்டிரிகிறோம்.

நானும் உங்களை போல்தான் ,பல கதைகள்,பல பாடல்கள் பல அனாலிசிஸ்  எல்லாமும் உண்டு என்னிடமும்.

அப்படி  ஒரு தடவை ,நான் தூங்கி எழும்போது, ஒரு ஆள் என் கனவில் வந்தான். அவன் அவதரித்த பாத்திரம், என்னால் நினைத்து பார்க்க முடியாத  ஒன்று.  அதை நான் அனாலிசிஸ் செய்தேன் ,கொஞ்சம் நம்பும் தன்மை இருக்கும் என்று நம்புகிறேன் என் அனாலிஸில் .

சிறு நிமிடங்களுக்கு இந்த அனாலிசை படியுங்கள். படித்துவிட்டு உங்கள் அனாலிஸுக்கு  செல்லுங்கள்.

நன்றி .

           ஆண்டு – இரண்டாயிரத்து இருபத்தி மூன்று

                             “செவ்வாய் கிழமை”

“நான்கு மணிக்கும்- ஐந்தரை மணிக்கும்” இடையில் நடந்த ஒரு அனாலிஸ்.

நான் எப்பொழுதும், மதியம் சாப்பாட்டுக்கு பிறகு, ஒரு மணி நேரம் தூங்குவேன் . தூக்கத்தில் யார் என் கனவில் வந்தாலும் ,அவர்களோடு பல நேரம் பேசி, அவர்களோடு ஒரு உறவை உருவாக்க ஆசைப்படுவேன் .

ஏன் என்றால், அவர்கள்தான் நம்மக்கு வேண்டிய வார்த்தைகளை நமக்கு பிடிக்கும்படி பேசுவார்கள், நம் ஆழ்மனம் நினைப்பதை அழகாய் வர்ணித்து காட்டுவார்கள்.

ஏன் ?

சில நேரங்களில், நினைவில் செய்த தப்பை கூட, கனவில் மாற்றி காட்டுவார்கள். நாம் அந்த உலகத்தை எட்டும்போது , யாரவது நம்மை எழுப்பி விடுவார்கள்.

அதன் பிறகு , நாம் அதை நினைத்தால், அந்த காட்சிகள், முழுசாக இருக்காது, அரைகுறையாய் தெரியும் . பாதி காட்சி தான் நினைவில் இருக்கும்.   “வருது ,வந்துச் , பேசினா , என்னமோ சொல்றான்,”ஆனா என்னனு சரியாய் தெரியல”,எதுக்கு அவன் வந்தான் , ஏன் அவ அப்படி பேசினா”  என்றெல்லாம் சொல்லுவோம் .

ஆனால், மனதுக்கு பிடித்த காட்சியாய் சில சமயம் இருக்கும்.அது நம்முடன் எப்பொழுதும் வாழும். அதை பற்றி நினைக்கும்போதெல்லாம் ஒரு ஏக்கம் வரும் .ஒரு சொல்லமுடியாத சந்தோஷம் பொங்கும். திரும்பவும் அதை யோசிப்போம்  , ஆனால் , அதே காட்சிகள் ஒரு போட்டோவை போல் வந்து வந்து மறையும். ஆனால் , அதை முதலிருந்து யோசித்தால், பாதி மறந்துபோயிவிடும் .பாதி மட்டும் நினைவில் இருக்கும்.

அன்று நான் தூங்கி எழும் முன்பு .கடைசியாய் நான்  கனவில் கண்ட காட்சி.

“நானும் ஸ்ரீதரும் பேசி கொண்டிருந்தோம், ஸ்ரீதர் என் வீட்டில், என் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார்  . நான் வியர்ந்து போனேன். ஸ்ரீதர் சார் ! நீங்களா என்று கேட்டேன் . ஐயோ! என்னால நம்ப முடியல என்று சொன்னேன்.

ஆமா டா ! நானேதான் ! ஸ்ரீதர் ! ஆக்டர் ஸ்ரீதர் என்று அவரோட ஸ்டைலில் சொன்னார். சிலிர்த்து போனேன்.

என்னைக் தெரியும், இது சாத்தியம் இல்லை என்று. என் மனதிற்க்கும் தெரியும்,ஆனால் , என் உலகத்தில்

என் வீட்டில், என் அறையில் , என் கனவில் வந்தார்.

வாடா ! எப்படி இருக்க ?

 என்னை அவர் “டா” போட்டு கூப்பிட்டது, என் கனவை புல்லரிக்க வைத்து.

சார்! நீங்க என் வீட்டுலயா. எப்படி சார் இருக்கீங்க. என்னால நம்ப முடியல என்கிறேன்.

டேய்! என்னடா சாருன்னு கூப்படற ?  ஸ்ரீதரன்னு கூப்புடு. மறந்துட்டியா என்னய ?

நீயும் நானும் எத்தனை நாள் பழகி இருக்கோம், உங்க அம்மா கையாள எத்தனைவாட்டி மீனுக்குழும்பும், தோசையும் சாப்புட்டிருக்கேன்.எத்தனை தியேட்டர் , ப்ரோடேஷன் கம்பெனி ஏறி இரங்கிரிகோம் .மறந்துட்டியா?

இன்னைக்கு நா இந்த நிலமைல இருக்கேன்னா , அதுக்கு நீங்களும் ஒருவிதத்துல காரணம்தானே .

ஆமாங்க, நானும் ஒரு  காரணம்.

எப்பயோ நான் அவரோட பழகி இருக்கேன்னு சொல்றார். அம்மா மீன் குழம்பு வச்சு குடுத்தாங்கன்னு சொல்றார் தியேட்டர் போயிருக்கோம்னு சொல்றார்,

 எனக்கே  எப்போ எங்கன்னு ஞாபகம் இல்ல.அவர் சொல்றார் , நான் கேக்கறேன் .

ஆனால் என்னோடு  அவர் பேசுகிறார் . சிரிக்கிறார் . அது மட்டும் நிஜம்தான் .

அப்படியா எனக்கு ஞாபகமே இல்லை என்றேன்.

ஒன்னு கேக்கவா உங்கள ?

சொல்லுடா என்று அவர் சிரித்துக்கொண்டே சொன்னார் .

ஒரு போட்டோ மட்டும் எடுத்துக்கவா உங்களோட ? ஆசையா இருக்கு என்றேன் .

ஏய்! come on man. ஒரு போட்டோவோட நிறுத்திடலாம்னு பாக்கறியா ?

உன்னோட காபின்னா எனக்கு உசுரு, அத போட்டுத்தா .

எனக் சற்று ஆச்சிரிமாய்  இருந்துது, எப்படி இவருக்கு தெரியும்னு. இதோ சார், கொண்டாறேன் என்று உள்ளே சென்றேன்.

‘அடுப்பை பற்ற வைத்தேன் ,பாலை சுட வைத்தேன் . டம்பளரில்  டிகாஷனை ஊற்றினேன். அதில் சர்க்கரைக்கு பதில் உப்பை போட்டேன்.

(உப்பை போட்டு காபி கலந்தேன் , கனவில் அது உப்பா , சர்க்கரையா என்ற சுவை இல்லை போல இருக்கு  என்று நினைத்து கொண்டேன்)

அதை அவரிடம் குடுத்தேன் , குடித்து “த் த் தத்த அருமையா இருக்குடா என்றார். காபின்னா இது காபி . சூப்பர் டா . தேங்க்ஸ் என்றார்.

நான் நின்று கொண்டிருந்தேன் .

நான் நிற்பதை பார்த்து , ஹேய் வா உக்காரு .

அப்பறம்…  எப்படி இருக்க ? உன்னோட ஆக்டிங் பயிற்சியெல்லாம் முடிஞ்சிருச்சா ? அது எப்படி உங்களுக்கு தெரியும் ?

நீ என்னோட நண்பன்டா . நாந்தான் சொல்றேனே , எப்படி மறக்க முடியும் . உனக்கு ஞாபகம் இல்லைனு நினைக்கிறன் என்று அவர் சிரித்த முகத்துடன் சொன்னார்.

நான் ஆச்சிரிய பட்டேன் . அவர்  பேசுவது என்னால் உணரமுடிந்தது, ஆனால், எல்லா வார்த்தைகளும் ஞாபகம் இல்லை. அறைகுறையாய் ஞாபகம் இருக்கிறது. 

 நான் எப்பொழுதும் யோசித்து கொண்டிருந்த ஒரு ஆள்.  “ஸ்ரீதர் “.      அவரை  போல் ஆகவேண்டும் என்று எப்பொழுதும் ஆசைப்பட்டேன் . அவர்தான் என் இன்ஸ்பிரஷன். இப்பொழுது அவரே என் முன் இருக்கிறார் , என் வீட்டில், என் அறையில் ,என் கனவில்.

அவரும்  நானும் பேசிக்கொண்டிருந்தோம் என்று யாரிடமாவது சொன்னால் – சிரிபார்கள், பீலா  விடாத என்பார்கள்  . அவர் பெரிய சினிமா நடிகர். அவர்  என்னுடன் பேசினார்  என்று சொன்னாலே , நம்பமாட்டார்கள் . அதுவும் கனவில் பேசினார் காபி குடித்தார் ,போட்டோ எடுத்தார் என்னுடன் என்று சொன்னால், பைத்தியம் , முட்டாளே உளறாதே என்பார்கள்.யார் என்ன சொன்னாலும்  நான் அவரை பார்த்தது உண்மைதானே .அவர்  பெரிய ஹீரோ , நான் அவருடைய  ரசிகன் , அவர்  போல் ஒரு நடிகன் ஆகவேண்டும் என்று எப்பொழுதும் ஆசை பட்டேன் . ஆனால்,என்னால் ஒரு ரசிகனாகதான் ஆகா முடிந்தது .

ஸ்ரீதர் என்ற ஒருவர்  என் வாழ்க்கையில் ஒரு நடிகராக  இருந்தார் இன்று காலை வரை .ஆனால் , இன்று அவர்  என் கனவில் வந்ததில் இருந்து   அவரை  பற்றியே  நினைத்து  கொண்டிருக்கிறேன் .என் பக்கத்தில் உட்கார்ந்தார் , அவர்  பேசிய வார்த்தைகள், அவர் காட்டிய அன்பு என் கூட பிறந்த ஒரு சகோதரன் என்ற எண்ணத்தை  உருவாக்கியது

ஒரு வித ஏக்கம் அவர்  மேல் வந்தது.

சார், ரொம்ப சந்தோஷமா இருக்கு  எனக்கு . என்னய பத்தி சரியா கேக்கறீங்களே, ரொம்ப நன்றி சார்.  சரி ஸ்ரீதரா.உன்னோட பயிற்சி எப்படி பொது . அத சொல்லு முதல, ஆமா, நீ! போன வாட்டி ஒருத்தங்க கூப்டங்கனு சொன்னியே . அது யார் ?

ஆமா சார், அவங்க பேர் ஜானவி .

ஓ! அவளா ! அது வேண்டாம். அது கொஞ்ச குசும்பு புடிச்ச பொண்ணு , நமக்கு வேற யார் படத்துலயாவது கேட்டு பாப்போம். கொஞ்ச நாள் இரு..

சரி சார்.

 better ,பேசாம என்கூட வந்துடு  , நா போற ஷூட்டிங்க்கு வா . உனக்கு ஏதாவது கதை , ஐடியா , ஏதாவது தோணிச்சுனா  அப்படியே சொல்லு , எனக்கு அடுத்த படத்துக்கு ஒரு அசிஸ்டன்ட் வேணும் .நீ என்கூடவே இரு. ஏதாவது வாய்ப்பு வரும் கண்டிப்பா. “நம்பிக்கையும், பொறுமையும் எழுந்துடாத, ஒரு நாள் சான்ஸ் கடைக்கும். நம்பிக்கைதான் நம்ப துறையோடு கடவுள், பொறுமைதான் நம்மளோட ஒரே வேலை. சரியா என்றார்.

நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன் கொஞ்சம் பெருமை பட்டேன்.

ட்ரிங் …ட்ரிங்…. என்று பலத்த சத்தத்தில் போன் அடித்தது .கனவு கலைந்தது.

சில நிமிடங்களுக்கு ஒன்றும்  புரியவில்லை. ஸ்ரீதரின் முகம், நான் அவனோடு பேசிய தருணம் , காபி குடுத்தது , எனக்கு அவன் அட்வைஸ் பண்றான் , நான் அவன்கிட்ட ஒரு அடிமை மாறி  அவனுக்காக இருந்தேன்னு  தோணுது. ஏதோ என்னைக் சொல்லி தாரான் .அது மட்டும் ஞாபகம் இறுக்கு .

நான் அந்த கனவை திரும்பவும் சிந்தித்தேன். என்னால் அந்த கனவுக்கு திரும்பவும் முழுசாய் சிந்திக்கமுடியவில்லை .

திரும்ப திரும்ப அந்த கனவை நினைத்தேன். ஸ்ரீதர்! ஸ்ரீதர்! ஸ்ரீதர்! என் மண்டைப்பூராவும் ஸ்ரீதர். எண்ணங்களில் ஸ்ரீதர். எனக்கு அந்த பேர் மட்டும் பதிற்ந்து இருந்துது. கொஞ்சம் பதற்றமாய் இருந்தேன். என் குட்டி அறையில் அலை பாய்ந்தேன்.

என்னன்னவோ கனவுல வந்தது.கனவை திரும்பவும் நினைத்தான்.

கடைசியா அவன் கதையை பத்தி பேசினான், எனக்கு எடோ அட்வைஸ் பண்ணான் .அதோட முழிப்பு வந்திடுச்சு. அதுக்கு அப்பறம் என்ன ஆச்சு?

போன் வந்ததே , என்னனு பாப்போம் .

பெரும் மூச்சு விட்டு ! அலாரம் வச்சிருக்கேன் நாந்தான் .

ஐந்தரை மணி என்று போனில் மணி காட்டியது.

அவ வேற வந்துடுவா, வேலைக்கு நேரம் ஆச்சு .பேப்பர் வேற காஞ்சிதான்னு தெரியல. பரபரன்னு வேலையெல்லாம் பார்க்க தயார் ஆனான், தலை வாரினான், முகம் கழுவினான் ,பக்கத்தில் ஸ்ரீதருடைய சாவி இருந்ததை கவனித்தான். ஒரு கணம்  அதை பார்த்தான் , முகம் மாறியது.

அவன் எங்க காணும் ? இத்தனை நேரமா அவனை பத்தி யோசிக்கவே இல்லையா ? அவன்தான் ஆனா ,என்னோட கனவுல வந்தான் . எங்க போயிருப்பான் என்று யோசித்து அவனுடைய நாற்காலியில்  வந்து உட்கார்ந்தான்.

டேபிள் மீது இருந்த பேப்பரை பார்த்தான். கையெல்லாம் பதறியது, கோபம் வந்தது ,எழுதவே இல்ல நா , தூங்கி தொலஞ்சிட்டேன் .அவகிட்ட திட்டு வாங்கணும்னு என்னைக் இன்னிக்கு இருக்கு

அந்த பேப்பர் கரையாக இருந்தது காபி கலரில். அதை பார்த்தான், ஏதோ ஒரு காட்சி எழுத பட்டிருந்தது.பேப்பர் ஒரு பக்கம் கரையாகவும் ஒரு பக்கம் வெள்ளையாகவும் இருந்தது . அவன் எங்க போய்ட்டான் , எங்கிட்டா சொல்லாம போக மாட்டானே என்று புலம்பினான்.

 பேனாவை எடுத்து பின் பக்கம் எழுத துடங்கினான்.  (நான் இப்போது என் கதையை எழுதப்போவதில்லை, ஸ்ரீதர்தான் என் கனவில் வந்தான், அவனை பற்றி ஒருசில வார்த்தைகள் எழுத என் மனம் சொல்கிறது) 

“என் மனம் ஒத்துழைக்கவில்லை, ஸ்ரீதரை பற்றின எண்ணம் வர துடங்கியது. நேற்று வரைக்கும், அவன் ஒரு திமிரு பிடித்தவன்,அதிக பிரசங்கி  என்று சொல்லிக்கொண்டிருந்தேன். ஆனால், இந்த கனவுக்கு பிறகு, என்னைக் அவன் மேல் ஒரு அன்பு, கொஞ்சம் மரியாதை ஏற்பட்டது. அவனை நான் நிஜத்திலும் அதே போல் நடத்த வேண்டும் என்று நினைக்க மனம் தூண்டுகிறது .  நான் ஏதாவது அவனுக்கு செய்யவேண்டும் . கண்ணாடியில் என் முகத்தை பார்த்து,  கேட்டுக்கொண்டென் . என்ன செய்யலாம் அவனுக்கு .

வறுத்தமாக  இருக்கு .என் அழகான  நொடிகள் அவனுடன் தான் பலநேரங்களில், பல நாட்கள் ,பல மணிநேரம் அவனுடன்தான்  ” பறந்து போகாமல் இருக்க. நான் காப்பேன்”

“என் அன்புள்ள ஸ்ரீதரா!  உன்னை நான் பார்ப்பேனா என்று தெரியவில்லை . என்றாவது உன்னை பார்த்தால்,  எந்தன் கனவில் ஏன் வந்தாய் என்று கண்டிப்பாக கேட்பேன். என் அருமை ஸ்ரீதரா! ஒரு தடவை உன்னுடன் பேச வேண்டும். உந்தன் ஆசையை நிறைவேற்ற வேண்டும், உனக்கு “நான்” வேலை செய்ய வேண்டும் ,மக்கள் உன் பெயரை  சொல்ல வேண்டும். உனக்கு பட்டம் குடுக்க வேண்டும். ” சிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை உன்னை நடிகனாக மட்டும் இல்லாமல் , நல்ல உள்ளம் கொண்ட ஒருவனாக  பார்க்க  வேண்டும். வாழ்க ஸ்ரீதர். வாழ்க ஸ்ரீதர்.  என்றும் நீ எங்கள் உள்ளத்தில் வாழும் நல்ல “ஸ்ரீ ….. தர் என்று பாடலை போல் இந்த வார்த்தைகளை எழுதுகிறேன்  .

திரும்பவும் கதவை தட்டும் சப்தம் கேட்டது. “உள்ள “வாங்க” என்று பொறுமையாக  சொன்னான்.

சார். லொகேஷன் ரெடியா இருக்கு, வந்து பாருங்க என்று ஒரு அசிஸ்டன்ட் வந்து சொன்னான். வரேன் . நீ போ என்றார்.

அந்த கடிதத்தை பார்த்தான். ஸ்ரீ! வார்த்தையில் மட்டும் ஒரு கோடு போட்டான்.  லொகேஷன் வேற ரெடி பணிதங்களா , சரி போவோம். அதுக்கு முன்னாடி

நா வெளியே போகும் முன்பு கொஞ்சம் விளக்கங்களை சொல்லிவிட்டு போகிறேன். அப்பொழுதுதான் உங்களுக்கு உண்மைகள் தெரியும்.

என் பெயர் ஸ்ரீதர் – அசிஸ்டன்ட் டிரெக்ட்டராக பணிசெய்கிறேன் ஜானவி என்ற ஒரு இளம் இயக்குனருடன் . அவள் கொஞ்சம் திமிரு பிடித்தவள், அவள் என்ன சொல்றாலோ அதைத்தான் நான் கேட்கவேண்டும், ஏன் ? படத்தின் தயாரிப்பாளரும் அதைத்தான் கேட்கவேண்டும் .அவள் என்ன சொன்னாலும் மறுவார்த்தை பேசாமல் கேட்பேன் , என்ன வேலை , எந்த நேரத்தில் சொன்னாலும் கேட்பேன் . ஏன்என்றால்  , இன்னும் ஒரு இரண்டு படத்திற்கு பிறகு ,என்னைக் ஒரு படம் எடுக்க வாய்ப்பு தருகிறேன் என்றால், அதோடு , அவளே தயாரிக்கிறாள் என்று சொன்னால். வேறு வழியில்லை , நான் அவள் பேச்சுக்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும் .

இன்று மதியம் , நான் தூங்குவதற்கு முன்பு , நான் ஒரு காட்சி எழுதி கொண்டிருந்தேன்.

அப்பொழுது..

என் வேலைக்காரன் ‘ஸ்ரீதர் ‘காபி எடுத்து கொண்டு வந்தான்.

அவன் பெயரும் ஸ்ரீதர்தான் . பல நாட்களாக என்னோடு இருக்கிறான் , அவனுக்கு ஒரு நடிகனாக ஆக வேண்டும் என்று என்னோடு சேர்ந்தான் .

என் பெயரும் அவன் பெயரும் ஒன்றாக இருக்கே என்று நான் அவனை சேர்த்துக்கொண்டேன் .ராசியாக இருக்கும் என்று. அவனை நான் ஒரு வேலைக்காரனாகதான் பயன்படுத்திகிறேன் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் . பல நேரங்களில் ஒரு சிலர் என்னை திட்டவேண்டும் என்றால், பெயரை சொல்லி திட்டிவிட்டு, ” சார்! நீங்க இல்ல! அந்த ஸ்ரீதர் என்பார்கள்”

அவன் எனக்கு காபி போட்டு எடுத்துக்கொண்டு வந்தான் .கதவை திறந்தான் கீழே தண்ணி கொட்டியிருந்தது. அதை அவன் கவனிக்காமல், கால் வழுக்கி, தடுமாறி காப்பியை என் பேப்பரில் கொட்டிவிட்டான். நான் ஒரு வினாடி என்னை மறந்தேன் . அவனிடம் வார்த்தைகளை கொட்டினேன் .

டேய் ! பைத்தியம், கீழ தண்ணி கொட்டி இருக்கு, பாக்க மாட்டியா ? உன்னைய யார் முதல கதவை தட்டாம உள்ள வர சொன்னது ?. இது எவளோ முக்கியமான சீன் தெரியுமா ? ஜானவி ஒரு மணிநேரம்தான் டைம் குடுத்தாங்க, இங்க பாரு , போச்சு . அவளுக்கு  என்ன திட்ட எதுவும் இல்லையேன்னு யோசிப்பா , நீயே இப்போ அவளுக்கு வழி பண்ணிட்ட.காப்பிய யார் கேட்டா இப்போ ? காபியில சர்க்கரைக்கு பதிலா உப்பைதானே போட்டு தருவ  , இதை வேற நான் குடிக்கணும். முண்டம் ! முண்டம்! இதுக்கு பதுலா , நா தன்னியவே குடிப்பேன். வேல பாக்கரியோ இல்லையோ, ஆனா வளச்வளச் சுத்தி சுத்தி போட்டோ மட்டும் எடு.எதுக்கும் பிரயோஜனம் இல்லை, இதுல என்னக்கு கதை சொல்றன்னு  , அசிஸ்டண்டா சேத்துக்கோங்கன்னு வேற சொல்லு .

அந்த டைரெக்ட்டர் கத்துவா, அவகிட்ட யார் திட்டு வாங்கறது, போடா, நீயே போ , பேப்பர் மேல காபி கொட்டிடுச்சுனு சொல்லு என்று அதட்டினான்.

இத்தனை  நாலா இருக்கியே ஒரு வாட்டியாச்சும் உதவியா இருந்திருக்கியா , இதுல உனக்கு என்னோடவே  ரூம் வேண்டி இருக்கு.

என்னய எதுக்குதான் எங்கம்மா படுத்தறாங்கன்னு தெரியல , அவங்களுக்கு இவங்கள  தெரியும்னா ,அதுக்கு நான் என்ன பண்றது .கேட்டா ஒடனே , அவங்க அது பண்ணினாங்க , நான் கேட்டபொல்லாம் மீன் குழம்பு வச்சுக்குடுத்தாங்க , கஞ்சி போட்டு குடுத்தாங்க, தோசை வாத்து குடுத்தாங்கனு புராணம் பாடுவாங்க  . நான் கேட்டேனா பண்ணித்தர சொல்லி என்று முணுமுணுத்தான்.

ஸ்ரீதர் அதை கேட்டு வருந்தினான்.

எதுக்கு இங்க நிக்கற ? என்னைக் வேலை இருக்கா இல்ல தூக்கிட்டாங்களான்னு பாக்கணுமா ? என் முன்னாடி நீக்காத , நீ கலப்பு இங்கருந்து.

ஸ்ரீதர் எதுவும் பேசாமல்,மௌனமாய் வெளியே சென்று. “இவர் எப்போமே இப்படித்தான், ஜானவிஅம்மா படம்னாலே கத்துவார். பயப்படுவார். நாம கஷ்ட பட்டு , இவருக்கு இத்தனை நாள், பில்டர் காபி போட்டு குடுத்து,கேக்கும்போதெல்லாம் ஒரு கதைக்கு ஐடியா , டைலாக் ,ராத்திரி பகல்ன்னு வேலைகாரணவிட ரொம்பவே வேல பாத்தா. இவர் ஒரே வார்த்தைல தண்ணியே மேல்ன்னு

சொல்லிட்டாரே என்று வருத்தமாக நடந்தான்.

இப்படி பேசிட்டாரே , தோசை மீன்குழம்புன்னெல்லாம்  சொன்னது  அவனுள் வருத்தத்தை ஏற்படுத்தியது.  ஒரு நிமிஷத்துல எல்லாத்தையும் ஒடச்சிடாருள என்று புலம்பி கொண்டே நடந்து வெளியே சென்றான்.

உள்ளே அவன் கத்திவிட்டு, பேப்பரை துணியால் துடைத்து, காத்தாட கொஞ்சம் வைத்தான்.கதவை தட்டும் சப்தம்  கேட்டது. அய்யொ! அவ கூப்டா போரா, பேப்பர் வேற நனைஞ்சு போச்சு.எழுத்தல்லாம் அழிஞ்சு போச்சு , பயந்து கொண்டே கதவை திறந்தான் .

சார்!என்று உரக்க கூப்பிட்டான் . மேடம்க்கு அவசரமா ஏதோ வேலை  வந்திடுச்சாம். . அதனால இன்னைக்கு ஷூட்டிங் இல்லன்னு சொல்லிட்டாங்க. நாளைக்கு வராங்களாம். உங்ககிட்ட சொல்ல சொன்னாங்க நான் வரேன் என்று அவன் புறப்பட்டான்.

ஓ!   பெரும்மூச்சு விட்டான் . என்ன சொல்வது என்று தெரியாமல் கதவை மூடிக்கொண்டு முகத்தில் வருத்தத்துடன் நாற்காலியில் உட்கார்ந்தான். சற்று நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தான் .சில நிமிடத்தில் உறங்கிவிட்டான்.  கனவில் ஸ்ரீதர் ஒரு நடிகனாக அவதரித்து………

 கனவின் ஆரம்பத்தை நினைவு கொள்ளுங்கள்.

அனாலிசிஸ் முடிந்தது.

நன்றி.

உங்கள் வேலைகளை பாருங்கள்…..

                                      இப்படியும் ஒரு கதை  – வேறு ஒரு சூழல்

1.ரவி

கண்ணை கசக்கி கொண்டே படுக்கை அறையில் இருந்து வந்தான் ரவி. கண்ணை பிரிக்கமுடியாத   அளவிற்கு அவனுக்கு தூக்கம் முக்கால்வாசி கூட குறையாமல் நடந்து வந்தான். அவனின் தங்கை, அவனுடைய சட்டையை அயன் பண்ணிக்கொண்டிருந்தால். இவன் வருவதை பார்த்து, சிறிதாக ஒரு சிரிப்பு சிரித்து லேசாக தலையை நிமிர்த்தி அவனை பார்த்தால் . மீண்டும் தலை குனிந்து, சட்டைக்கு சென்றது அவள் கண்கள். அவன் நேராக கொல்லப்பக்கம் சென்றான், வெளிச்சமாக இருந்தது, வெளியே வர சோம்பேரித்தனம் , அதனால் திரும்பவும் வீட்டுக்குள் சென்று, பல்லை தேய்க்காமல் போயி தண்ணியை எடுத்து குடித்தான், பச்சை தண்ணி. குடிக்கும் சமயத்தில், அவனின் அன்றாட வேலையை பற்றி நினைத்தான் . இன்னிக்கும் அதே கம்ப்யூட்டர் அதே வேல, அதே பரபரப்பு, அதே முகங்கள், அதே “என்ன பேசுவது என்று தெரியாமல், கொஞ்சம் வம்பு பேச்சு, கொஞ்சம் அசட்டு பேச்சு’ பேசி எட்டு மணிநேரத்தை ஓட்டணுமே  என்று அலுத்துக்கொண்டான். இவன் வெறுக்கும் அளவிற்க்கு மோசமில்லை அவனுடைய வேலையும் அவன் கம்பெனியும் .

அப்பாவின் ‘கோரிக்கைக்காகவும், அம்மாவின் ஆசைக்காகவும், மற்றும் அவனின் ‘காதலியாக வரப்போகும் அல்லது வரவிருக்கும் பெண்ணுக்காக கூட இருக்கலாம் என்று இவனுக்கு ஒரு பருக்கை ஆசை  இருந்துது. ஆனால், அதை வெளிப்படுத்தவில்லை.

அம்மா அழைத்ததால்: “பொறியாடா இன்னிக்கி” என்ற சொற்கள் மற்றும் கேட்டது.

இவன்: போறேன்! போறேன்! என்றான் சோம்பலுடன்.

அம்மா: நீ என்னடி பண்ற ?

தங்கை: போகலம்மா..

அம்மா: நீங்க ரெண்டு பெரும் மாத்தி மாதிதான் பண்றீங்க, ஒரே எடத்துல ஆபிஸ வச்சிக்கிட்டு சேர்ந்து போனாதான் என்னவாம். நீ போனா, இவன் போமாட்டான். அவன் போனா, நீ போகமாட்டேங்கிற. இம்சயா இருக்கு.

தங்கை அம்மாவிடம் நடுஅரையில் இருந்து சொல்கிறாள்.”அவனுக்கு வேற இடம் எனக்கு வேற இடம்மா , ஒரே ரோடு அவளவுதான். நாங்க என்னென்னமோ ஒரே ஆபீஸின்ற மாதிரி பேசுறியே . அவனோட ஆபிசுக்கு என்னோட ஆபிசுக்கு ஒரே தெருன்னு வச்சிக்கோ. அதுக்காக ஒரே வீடு இல்ல என்றால்.

இவன் , அதை கேட்காதபடி, தங்கையிடம் ‘சட்டையை குடு’ என்று தாழ்ந்த குரலில் கேட்டான். அவளும் ஒரு பக்க கையை ஒரு தேய் தேய்த்து குடுத்தாள்.  அவன் அதை வாங்கிக்கொண்டு, அறைக்கு சென்று கதவை சாத்தி குளிக்க சென்றான். குளித்து முடித்து புறப்பட்ட்டான். குளித்தவுடன் சுறுசுறுப்பு வந்துவிட்டது. வேகமாக புறப்பட்டான் , காலை டிபனை அம்மா வந்து வைத்தால், அவனின் அப்பா இப்போதுதான் அவன் கண்ணில் படுகிறார். இருவருக்கும் பெரிய பாசபந்தம் இருக்கும்போல தெரியவில்லை.

அவரும் எதுவும் இவனிடம் பேசவில்லை, இவனும் பார்த்தான் , எதுவும் பேசவில்லை. தங்கை வந்து இட்லியை வைத்தால். “போதும்மா” என்றார் அப்பா. என்னக்கு ஒன்னு போடு என்றான் ‘ரவி’. சாப்பிட்டார்கள் இருவரும் பேசாமல். சாப்பிட்டுவிட்டு, அவனுடைய மடிக்கணினியை எடுத்து, பையை எடுத்து புறப்பட்டான் ‘ரவி”. வண்டியை எடுத்து, யாருக்கும் எதுவும் தகவல் சொல்லாமல் கிளம்பினான்  அவன் சாலையை கடந்து , இரண்டு ‘சிஞாளை’ தாண்டி , வந்தடைந்தான் அவனுடைய பிரதான சாலைக்கு .

2.ஆபீஸ்

“என் ஆசைகுரியவளே” என் கண்ணுக்கு தெரியாமல் , என் விழிக்கு படாமல் , என்னுடன் மறைந்து “கண்ணாமூச்சி” ஆடும் என்னவளே” என்ன செய்கிறாய் இந்த கலியுக உலகத்தில்”. நீ காலை வைக்கும் இடத்தில் பனிக்கட்டி பொழிவார்களா இஜீவன்கள் ? நீ போகும் இடமெல்லாம் “ஆலங்கட்டி’ மழை பொழியுமா?  வா! வா ! என் தோழியே! வந்து என் முன்னே நில்லு”.

எழுதிவிட்டு, அந்த தாளை எடுத்து ஒருமுறை படித்தான். பெருமையாக இருந்துது , ஆனால், சிறிய மனவருத்தம் ! இதை யாரிடம் குடுப்பது என்றுதான். அதை அவர் பார்த்துக்கொள்வார் என்று அவனுடைய பிடித்த கடவுளாகிய “ராமரை’ வேண்டினான். எழுதிய தாளை அவனுடைய டைரிக்குள் வைத்தான் . டைரியை துறைகளில், பல தாள்கள் இதே போல் இருந்து,ஒரு சில தாள்கள் பறந்தன . ஒவ்வன்றிலும் ஒவ்வரு கவிதை இருக்கும் என நம்பலாம்.  பரந்த தாள்களை எடுத்து மடித்து ,டைரிக்குள் வைத்தான். இதெல்லாம்தான் நம்மளோட நினைவுகள், பத்திரமா வச்சுக்கணும் “ஒரு சின்ன புத்தகமா போட்டு நம்ப வச்சுக்கலாம் என்றான் .வைத்து , அவனுடைய அறையை விட்டு வெளியே வந்தான். மணி எட்டு ஆச்சு! இவ குளிக்க போனாளா இல்லையா என்று அம்மாவிடம் உசத்திய குரலில் கேட்டான். அம்மா ,வந்துடுவாடா என்று சொல்லும்போதே , நா வந்தாச்சு, நீங்க போங்க என்றால் தங்கச்சி. அவன் குளிக்க சென்றான். அவனுக்கு நடக்காத ஒன்றை பற்றி நன்றாக சிந்திக்க தோன்றும். திடீரென குளிக்கும் நேரத்தில், ஒரு சிறிய கதையை உருவாக்கினான் .

                பிரியா கிட்ட நான் சொல்றேன் ! என் பல கவிஹாய்களில் ஒன்றை. அதற்க்கு அவள் என்ன சொல்வது என்று தெரியாமல் வெட்க படுகிறாள். நான் அதை புரிந்துகொண்டு, “நீ உன் கண்களால் என்னை கைதுசெய்தாயே” அதுதான் உண்மை அன்பு என்று நீ சொல்லு என்னை பார்த்து, அது போதும் என்கிறேன்.

அதற்க்கு அவள், “ஏராளமான கண்களை நான் பார்த்துளேன் , எந்த கண்களிலும் நான் இப்படி விழிந்ததில்லை, எந்த கண்களையும் கூர்ந்து நேசித்ததில்லை , நீ தான் என் முதல் கைதி “என் காதல் கைதி” என்கிறாள்.

இதையெல்லாம் அவன் நினைத்து பார்க்கிறான், குளிக்கும் சில நேரத்தில்.

இதே போல் இன்னொரு கதையை நினைக்க துடங்கினான். ஒரு குரல் “டேய்! மணி எட்டரை ஆது என்று அவன் அம்மா சொல்கிறாள். ‘நினைப்பு அடிபட்டு போனது”. கொஞ்சம் வேகமாக குளித்து, சட்டையை போட்டுகொண்டு ,தயாராகிக்கொண்டிருந்தான் அவனுடைய ‘இன்டர்வ்யூவுக்கு”. சட்ட நல்ல இருக்குடா என்று தங்கை சொல்லிவிட்டு போனால். அவனுக்கு வேலைக்கு போகும் எண்ணம் இல்லை, மந்தமான நாளை போல் எதையோ நினைத்து “முகம் வாடி”அவனை பாஷை தெரியாத ஊருக்கு போக சொல்வது போல் முழித்து கூடத்திற்கு வந்தான்.

அப்பா , அவசரமாக வந்து இவனுக்கு ‘ விபூதி வச்சுக்கோ, மார்க் சீட் எடுத்துக்கோ, ‘தைரியமா பேசு’ சலரி கேட்டாங்கன்னா “நாளுல இருந்து அஞ்சு கேளு” என்று அப்பா சொல்கிறார். அவன் தலையை மட்டும் அசைக்கிறான், ஆனால் முகத்தில் உணர்வு இல்லை.

அவனுக்கு ‘ப்ரியாவின் “ஞாபகம் வந்தது- அவன் விட்ட இடத்தில் இருந்து நினைக்கலாம் என்று தோணினது. அவன் அம்மா வந்து ‘சாப்பாடு’ குடுத்தாள் , அதை வாங்கிக்கொண்டு, அவனுடைய பிரியா கதையையும் -அவன் அப்பா சொன்ன ‘இன்டர்வ்யூ கதையையும் கேட்டு கொண்டிருந்தான். விருப்பம் இல்லாமல் சாப்பிட்டால், பிடித்த உணவாக இருந்தாலும் கசக்கும் ” என்பார்களே அப்படித்தான் இருக்கிறது என்னைக்கும் என்றான்.

பெரும்மூச்சு விட்டு , தண்ணி குடித்து. பொறுமையாக கிளம்பினான். அம்மா, அப்பா இருவரும் இவனை பலவிதமாக ‘உற்சாக படுத்தி’ அனுப்பிவைத்தார்கள்.  இவன் வண்டியை எடுத்து, புறப்பட்டான். சிஞாளை கண்டு கோபப்பட்டான், கூட நெரிசலை பார்த்து”அரிச்சலைடந்தான் ” வியர்வையை பார்த்தவுடன் மனதுக்குள் வியர்க்கும் அளவிற்கு அழுதான் . என்ன செய்தாலும், இத்தனை பேர் முன்னாடி எப்படி அழுவது என்று அடக்கி கொண்டு வண்டியை உருட்டி உருட்டி பத்தரை மணிக்கு அவனுடைய “இன்டர்வ்யூ இடத்திற்கு” வந்தடைந்தான்.

நான்கு மாடி கட்டடம் . மிரண்டுபோனான் . பயந்தான். உணர்ச்சிவசப்பட்டு வெளியே போய்விடுலாமா என்று யோசித்தான்.

பிறகு அவனுடைய வயதை நினைத்தான். ‘பொறுப்பா வேலைக்கு போறான் பாத்தியா அவன்” என்று அப்போதான் ஊரு சொல்லும் என்பதால் ஊருக்காக அன்று இன்டர்வ்யூக்கு சென்றான் “ரவி”.

அன்று , இவனுடன் மூன்று பேர் , அதே “போஸ்டிங்கில்” வேலைக்கு காத்திருந்தார்கள் என்று கீழே ரிஷப்ஷனிஸ்ட் சொன்னபோது இவனுக்கு கொஞ்சம் பதட்டம் வந்தது. அதே பதட்டத்துடன் முதல் மாடியில் உள்ள “மேனேஜர் அறைக்கு அனுப்பிவைத்தார்கள். பெரிய அரை, பல பலவீன கண்ணாடி, ஒரு சொட்டு தண்ணீர் கீழே காட்டியிருந்தால் கூட, சருக்குதான் என்று சொல்லும் “டைல்ஸ் ” தரை . ஏஸீ ! யாருமில்லாத அறையாக இருந்துது , அங்கே ஒரு சோபாவில் உட்கார்ந்தான். பதட்டமாக இருந்தான், அவர் என்ன கேப்பார், என்ன சொல்றது, எல்லாமே மறந்து போன மாதிரி இருக்கே என்று இல்லாத , தேவையில்லாத நினைப்புகளுடன் அந்த அறையை சுற்றி மேலும் கீழும் பார்த்து ரசிக்க துடங்கினான் .

உள்ளே இருந்து , ஒருவர் வந்து , இவனை பார்த்தது ‘ரவி” என்றார். இவன் எழுந்து”எஸ் ” என்றான். அவர் சிரித்த முகத்துடன்  வெல்கம்” என்று சொல்லி  அழைத்தது அவரின் அறைக்கு கூட்டி சென்றார். அங்கே கேள்விகளும் ரவியின் பதிலும் கொஞ்சம் சுமாராகத்தான் இருந்துது, இருந்தும் எப்படி அவன் ‘செலக்ட்’ ஆனான் என்று அவனுக்கு மிகவும் சந்தேகமா இருந்துது. அன்று முதல், அவனுக்கு பிடிக்காத அந்த வேலைக்கு செல்ல ஆரமித்தான் , நாட்கள் ஓடியது. தினமும் ஒன்பதரைக்கு புறப்படுவான், இரண்டு சிக்னலை கடந்து சென்றான். முதல் இரண்டுவாரம் நரகமாய் இருந்துது, மூன்றாம் வாரம் ‘நரகத்தை கடக்க பழகினான்” அடுத்த வாரத்தில் இருந்து ‘தோழர்களை’ தேடினான், நரக தோழர்கள் அவனை வரவேற்றார்கள். அவர்களின் அசட்டு பேச்சையும், கதையடிக்கும் விதத்தையும் முதலில் வெறுத்தாலும், சில நாட்களில் அவனும் அந்த கூட்டத்தில் ஒருவனானான் , சில வாரங்களில் கூட்டத்தின் முக்கியமான “நபரும்” ஆனான் .

3. ஸ்ரீஜா

“கண்ணை” மூடி வருவாயா ” “என் கனவில் வருவாயா”

“கருத்தம்மா என்ன சொல்வாள் “

“இவன் முகத்தை பார்த்து காதலித்தாயா ?

“நிறத்தை பார்த்து காதலித்தாயா ” ?

என்று கேட்டால் என்ன சொல்வாய்

“வான நிறத்தில் இருக்கும் பையனை நான் உன்னக்கு பார்த்து வைத்திருக்கிறேன் “

             இவனை நான் ஏன் ஒற்றுக்கொள்ளவேண்டும் என்று கேட்டால் என்ன சொல்வாய் ?

“நிறம் பார்த்து பேசாதே”

“மனம் திறந்து பேசு “

“உடலை பார்த்து காதலிக்காதே”

“உயிரை குடுப்பவனா என்று பார்த்து காதலி”

“கண்ணில் தெரியும்  நிறம் கறுப்பென்றாலும், அவனின் உள்ளம் ‘வெள்ளை”.

                             என்று சொன்னால் “ஸ்ரீஜா”

“ஓடிப்போதாம் கழுதை , அத புடிக்கபோதாம் குதிரை” என்றால் அம்மா .

ஸ்ரீஜாவுக்கு கோபம் வந்தது, அதை அடக்கிக்கொண்டு மேலும் pesinaal .”அப்பா சொன்னது ஞாபகம் இல்லையா உன்னக்கு . அதைதான் நானும் சொல்றேன். இது நிறத்தால வந்த காதல் இல்லமா, மனசால வந்த காதல். உன் குடும்பத்துல எல்லாம் வெள்ளை , அது உன்னோட வாரிசை பாதிக்கும்னா அது நடக்கும். நா அங்கதான் வாழப்போறேன், அந்த மாநிறமொடதான்  இருக்க போறேன். வந்து பாரு. அம்மாவின் உறவு இந்த சூழலுக்கு பிறகு அவளுக்கு விட்டுப்போனது. அவளின் கண்மூடித்தனமான   காதல் அவள் ammavidam   irundhu  avalai  விலகச்செய்தது   அவளும் அதை பொருட்படுத்தாமல் விலகினால்.

‘ரவியின் வீட்டில் அவனின் அப்பாவிற்கு, இந்த திருமணத்தில் சம்மதம் முழுமனதோடு இல்லை.அம்மா , தங்கை இருவரும் ரவிக்கும் ஸ்ரீஜாவுக்கும்    துணையாக இருந்தார்கள். அவர்களின் ஆசிர்வாதத்தாலும், அப்பாவின் ‘ரொக்க ஆசிர்வாதத்தாலும்,கல்யாணம் நடந்து முடிந்தது. அப்பாவின் உறவு ரவிக்கு கல்யாணத்துக்கு  பிறகு மாறியது. இருவருக்கும் மௌனம் இடையில் நின்றது, தோன்றும்போது ஒரு வார்த்தை  ,  நான்கு  நாட்களுக்கு  ஒருமுறை சிரிப்பு  , அதுவும்  தங்கை ஏதாவது “நகைச்சுவை ‘ சொன்னால் ம் மட்டும் . தங்கை வழியாக செய்தி ரவி அப்பாவுக்கு சொல்லுவான்.மற்றபடி, ஸ்ரீஜா, ரவி, அப்பா மூவரும் ஒருவரின் ஒருவர் மௌனம்தான் மிச்சம்.

4. பேனா

‘என் அம்மா என்னிடம் பேசி இன்றோடு ஒருவருடம் ஆகிவிட்டது. ரவியின் அப்பா என்னுடன் தேவையென்றால் மட்டும் பேசுகிறார். ரவியின் அம்மா என்னோடு அன்பாக இருக்கிறாள். நானும் அவளும் பல நேரங்களில் எங்கள் நினைவுகளை பகிருவோம், எங்களுக்குள் எந்த மனஸ்தாபமும் வந்ததில்லை, ரவியின் தங்கை – என் தோழி , எந்த நேரமும் ரவிக்கு பிறகு என்னுடன் அன்பாகவும், துணையாகவும் இருக்கிறாள், அவர்களை பொறுத்தவரையில் ,கிடைத்த வாழ்க்கையில் எல்லாமே நாம் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்காது, அப்படி எதிர்பாரா விஷயம் நடந்தால், அதை நாம் ஏற்று  வாழ்வதுதான் ‘சரி” என்பார்கள். ரவியின் அப்பா என்னோடு முகம் குடுத்து பேசுவார், ஆனால் மனதில் இவள் நம் குடும்பத்தில் இருபவள்தானா, இவள் நம் குடும்பத்துக்கு சரி வருவாளா என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார் மனதுக்குள்  என்ற சந்தேகம் அவரின் முகத்தில் எப்போதும் தெரியும். அதற்காக என்னை தனியாக சாப்பிடு , நீ வேற மேஜையை சேர்ந்தவள் என்று என்னை ஒதுக்கமாட்டார். எனக்கும் சமமான உரிமையை தருவார். நல்ல மனுஷன்.

ரவியின் அம்மா எத்தனையோ முறை , என் அம்மாவிடம் , என்னதான் இருந்தாலும் அவள் உங்க பொண்ணு. நீங்கதான் ஏத்துக்கணும், அவாளா வாழ்த்தி ஆசிர்வாதம் பண்ணனும்னு சொல்லியும் , அம்மா இதுவரைக்கும் இங்கே  வரவில்லை, மறுத்துவிட்டாள். “மண்டகனம் பிடித்தவள்”தானே அவளும் நானும். அவள் பேசினால்தான் நானும் பேசுவேன் என்று ஒரு வருடமாக பேசாமல், கூப்பிடாமல் இருக்கிறேன்.

என்னதான் , சண்டையிட்டாலும், வார்த்தை கொட்டினாலும், உன் அம்ம்மா அவள் , நீ கண்டிப்பா அவளை கூப்பிடனும் என்று ரவியின் அம்மா கேட்டுக்கொண்டாள். என்னால் மறுத்து பேசமுடியவில்லை. ஒப்புக்கொண்டேன்.

அம்மாவை எங்களுடைய  ‘ஒரு வருட’ நிறைவு ‘ஆண்டு விழாவுக்கு (வேட்டின் தினம்) அழைத்தோம். அவள் வருவாள் என்று ரவி நம்புகிறான். அவரின் அம்மாவும் நம்புகிறாள் . இன்று , எங்கள் “அன்னிவெர்சரி” , என் தோழிகள், தோழர்கள், மற்றும் உறவினர்கள் எல்லோரும் வருகிறார்கள். ரவியின் அப்பா “கையில்” பொக்கேவுடன் வந்து என் முன்னே நின்றார். “மனுஷன் என்ன சொல்ல போறாரோ என்று கொஞ்சம் பதட்டமாக இருந்துது. சுற்றி பார்த்தார்,  ரவி” ரவி” என்று அழைத்தார், என்னக்கு அதிசயமாக இருந்துது, கூடவே அவரின் மனைவியையும் கூப்பிட்டார்.

ரவி , அம்மா இருவரும் கொஞ்சம் ஆச்சிரியத்துடன் வந்தார்கள். இங்க வாடா என்று அவரை என் பக்கத்தில் நிற்கச்சொல்லி, சிரித்த முகத்துடன் “ஹாப்பி அன்னிவெர்சரி” டு யு “என்று சொல்லி , பொக்கேவை குடுத்தார்.

ரவியும் ஸ்ரீஜாவும் சந்தோஷத்துடன்  வாங்கிக்கொண்டு, ஆசிர்வாதமும் பெற்றனர். தங்கை, ‘ வாங்க எல்லாரும் ஒரு போட்டோ எடுத்துக்கலாம் என்று ஒரு குடும்ப படம் எடுத்துக்கொண்டனர். “romba சந்தோஷம், அப்பா வந்து பேசுவார்ன்னு எதிர்பார்க்கவே இல்ல endraal ஸ்ரீஜா அம்மாவிடம். நானே எதிர்பாக்கல, என்னவோ திடிர்னு மனஸு மாறிடுச்சு, எல்லாம் நல்லதுக்கே .

அவளுக்கு லேசாக , அவளின்    அம்மா வருவாளா என்ற ஏக்கம்  வந்தது   .

வாசற்படிக்கு வந்து , வருவோரை வரவழைத்து  கொண்டே ‘கண்கள்’ அம்மாவை தேடினது . ரவியின் அப்பா வெளியே  வந்தார் , ஸ்ரீஜாவை பார்த்து’ என்ன ஆச்சு . யாரை தேடற என்றார் ?

அம்மாவ … என்றால் .

4.ஷ்யாமளா

ஜன்னலருகே வெயிலின் தாக்கத்தில் அவள் முகத்தில் சூரிய ஒளி ஒரு கன்னத்தில் அடித்தது. அவளின் மாமியாரும் ரவியும் பேசியஹே பற்றி நினைத்துக்கொண்டிருந்தால். ” ஒன்னு இயர் அன்னிவெர்சரி “க்கு கண்டிப்பா வரணும் நீங்க என்று ரவியின் அம்மா அழைத்திருக்கிறாள்.

ரவியும், எங்களை மன்னிச்சு உங்க பொண்ண ஏத்துக்கோங்க என்றான்.

ஜன்னலை பார்த்துக்கொண்டே நின்றாள் ஷ்யாமளா “…..

“ஹேய்! ஷ்யாமளா , போலாமா அம்மாத்துக்கு. “எஸ்! டியர்! போலாம். என்னால நம்பவே முடியல அம்மா எண்ணெயை கூப்ட்டான்னு. என்னோட பேசியே ஒரு வருஷம் ஆச்சு, நானும் அம்மாவோட பேசவே இல்ல. ரெண்டு பேருக்கும் “ஈகோ’தான் . என்ன … நீ வேற ஆத்து பையன போய்ட்டா, நா வேறயா போய்ட்டேன். உங்கப்பா எண்ணெயை ஒத்துண்டதுதான் ரொம்ப பெரிய விஷயம் . ஆமா என்றார் ‘ஷ்யாமளாவின் ” வீட்டுக்காரர்.

ஷ்யாமளா ,வாசுதேவ் இருவரும் ஷ்யாமளாவின் அம்மா வீட்டுக் சென்றார்கள். அம்மா அங்கே ஷ்யாமளாவை நன்றாக கவனித்து கொண்டால். மாப்பிள்ளைக்கு தடபுடல் விருந்து, அரட்டை பேச்சு, மாப்பிளை வீடும், பொண்ணு வீடும் ஒன்றாக சேர்ந்து , விருந்து அணிந்தார்கள். ஷ்யாமளவுக்கு ஆச்சிரியமும், சந்தோஷமும் அதிநவீனமாக இருந்தது. அம்மாவை போயி கட்டியணைத்தாள். எல்லாரும் வாங்க – ஒரு ‘போட்டோ’ எடுத்துக்கலாம் என்று “எல்லோருமாக” ஒரு போட்டோ எடுத்துக்கொண்டார்கள். 

ஷ்யாமளாவின் அம்மா – நீ பண்ணினது சரியா, தப்பான்னு நா சொல்ல விரும்பலம்மா. உன்ன உன் ஆத்துகாரமும் , மாமனாரும், அவா அம்மாவும் நன்னா பாத்துகாரான்ன்னு சொன்ன. கேக்க சந்தோஷமா இருக்கு, இனிமே அதுதான் உன்னோட வீடு, சந்தோஷமா , நீ நினைச்ச வாழ்க்கை வாழு .

ஷ்யாமளா ஒரு கணம் யோசித்து நின்றாள், கொஞ்சம் கலங்கினாள், ‘சாரி’ சொல்ல வாய் எடுத்தால், அம்மா குறுக்கிட்டு, நேரமாயடுத்து, போயிட்டு வா, மாப்பிள்ளை காத்திண்டிருக்கார் என்றால்.

வரேன் மா என்று சொல்லி புறப்பட்டாள்.

வெயில் கண்ணில் அடித்தது. நினைவுக்கு வந்தால் ஷ்யாமளா. ஜன்னல் கதவை மூடினாள், மணியை பார்த்தால் , பதினொன்று மணி. இப்போ எல்லாரும் அங்க இருப்பா. நான் மட்டும் போனா, அங்க பாதி பேருக்கு என்ன தெரியவும் தெரியாது , அன்னிக்கி எங்கம்மா எண்ணெயை ஏத்துண்டா , இன்னிக்கி நான் என் பொண்ண ஏத்துக்கணுமா ?

யோசித்துக்கொண்டே உடையை மாற்றினால். கொஞ்சம் அலங்காரம் பண்ணிக்கொண்டு, வீட்டை பூட்டிவிட்டு, ஆட்டோ ஒன்றை பிடித்தால்.

“எங்க போணும்மா ?

“சிவகாமி நகர் ” என்றால்.

ஏறியவுடன் , ஸ்ரீஜாவுக்கு போன் செய்தால் .

“ரவி” எடுத்தான்.

“நா ஷ்யாமளா பேசுறேன்ப்பா ” “சொல்லுங்க !

உங்க தெரு பேர் என்ன ?

 
 
 

Comments


Post: Blog2_Post

Subscribe Form

Thanks for submitting!

(213) 270-2839

©2022 by Hayat Hotel. Proudly created with Wix.com

bottom of page