top of page

Tanglish Talks: Happy Deepavali

  • Writer: Trinity Auditorium
    Trinity Auditorium
  • Oct 23, 2022
  • 1 min read

I keep writing scenes and other random stuff. Thought they’d make for fun blog posts, titled ‘Tanglish Talks’. Do read, share, mock, comment, ring the bell icon, whatever 🙂 !

தெற்கில் கேட்டால் கிருஷ்ணன்-நரகாசுரன் என்று கதை சொல்கிறார்கள். வடக்கில் ராமன்-வனவாசம் என்று நம்புகிறார்கள். இதில் எது உண்மை? ஒரே பண்டிகைக்கு எப்படி இரண்டு மரபுகள்? ஒன்று த்ரேதா யுகத்திலிருந்து ஒன்று துவாபர யுகத்திலிருந்து. At least, கிருத்துவர்களை Christmas பற்றி கேட்டால் ஒரே பதில் வரும். ‘எங்கள் தேவன் பிறந்த நாள்’ என்று சொல்வார்கள், ‘Happy birthday’ பாடாத குறையாய். தெள்ளத்தெளிவாக ஒரு consistency இருக்கிறது. ‘ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை’ என்று 1965-யிலேயே வாலி எழுதினார். அனால் இன்று கூட ‘ஏன்’ என்று கேட்காமல் நாம் கண்ணை கட்டி கொண்டு காதை பொத்தி கொண்டு ‘பெரியோர்கள் சொன்னார்கள்’ என்று ‘ஆனால் எதற்காக’ என்று தெரியாமலேயே வழிபாடுகள் செய்கிறோம். ‘ஏன்’ என்று இப்போது நான் கேட்கிறேன் நேற்று உண்ட தீபாவளி லேகியத்தின் சுவை நாவில் இன்னும் நீந்தியபடி. நல்வாழ்த்துக்கள்.

 
 
 

Comments


Post: Blog2_Post

Subscribe Form

Thanks for submitting!

(213) 270-2839

©2022 by Hayat Hotel. Proudly created with Wix.com

bottom of page